கலவையான விமர்சனங்களுக்கு இடையே.. வசூலில் சாதனை படைத்து வரும் ‘தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்’!

அமீர்கானின் தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் முதல் நாளே வசூலில் சாதனை படைத்துள்ளது.

Recommended Video

தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் விமர்சனம்- வீடியோ

மும்பை: அமீர்கானின் தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் படம் இந்தியாவில் மட்டும் முதல் நாளில் ரூ 52 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

பாலிவுட்டின் தற்போதைய வசூல் மன்னன் அமீர் கானும், எவர்கிரீன் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனும் முதல்முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான். பல கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட வரலாற்று படமான இதில், கத்ரினா கைப், பாத்திமா சனா ஷேய்க் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே, கடந்த 8ம் தேதி ரிலீசான இப்படத்திற்கு ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.

வசூல் சாதனை:

வசூல் சாதனை:

ஆனாலும், வசூலில் தொடர்ந்து இப்படம் சாதனை படைத்து வருகிறது. இந்தியாவில் மட்டுமே முதல் நாள் ரூ 52 கோடி வரை வசூல் செய்து இப்படம் சாதனை படைத்துள்ளது. இன்றும், நாளையும் விடுமுறை தினம் என்பதால் இன்னும் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய சாதனை:

புதிய சாதனை:

பாலிவுட்டில் முதல்முறையாக 300 கோடி ரூபாய் செலவில் தயாரான படம் எனும் பல சிறப்புகளுடன் தயாராகியிருக்கும் இப்படம், உலகம் முழுவதும் 7000-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானது. இந்த வகையில் பாலிவுட்டில் அதிக திரையரங்குகளில் வெளியான படம் எனும் புதிய சாதனையையும் இப்படம் படைத்துள்ளது.

விஜய் கிருஷ்ணா:

விஜய் கிருஷ்ணா:

பெற்றோரைக் கொன்றவர்களை உற்றார் உதவியுடன் பழிதீர்க்கும் வழக்கமான நாயகன் கதை தான் தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான். ஆனால், அதே பழைய கதைக்களத்தை சற்று வித்தியாசமாக ஆங்கிலேயர் ஆட்சி பின்னணியில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா.

தமிழிலும்:

தமிழிலும்:

ஏற்கனவே, அமீர்கான் நடிப்பில் வெளியான 'தங்கல்' படம் ரூ 2000 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, மாபெரும் வெற்றி பெற்றது. எனவே, தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் படமும் தமிழில் அதே பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 180 திரையரங்குகளில் திரைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X