Thulasi Nair: மணிரத்னத்தின் ‘கடல்’ பட நாயகி துளசி நாயரா இது... என்ன இப்படி மாறிட்டாங்க..?

சென்னை: மணிரத்னம் இயக்கிய கடல் திரைப்படம் 2013ம் ஆண்டு வெளியானது.

இந்தப் படத்தில் கார்த்திக்கின் மகன் கெளதம், ராதாவின் மகள் துளசியும் ஹீரோ, ஹீரோயினாக அறிமுகமாகினர்.

Thulasi Nair: Mani Ratnams Kadal film actress Tulsi Nairs latest video is trending

நடிகை ராதாவின் மகளான துளசி கடல், யான் என இரண்டே படங்களில் ஃபீல்ட் அவுட் ஆகிவிட்டார்.

இந்நிலையில், அவரது அக்கா கார்த்திகாவின் திருமணத்தில் கலந்துகொண்ட துளசியின் லேட்டஸ்ட் வீடியோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வைரலாகும் துளசி நாயரின் லேட்டஸ்ட் வீடியோ
இந்திய சினிமாவில் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் மணிரத்னம். இவரது இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள், நடிகைகள் தவம் கிடக்கின்றனர். இந்நிலையில், மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் நாயகியாக அறிமுகமானவர் துளசி நாயர். 2013ம் ஆண்டு வெளியான கடல் திரைப்படத்தில் தான், நடிகர் கார்த்திக்கின் மகன் கெளதமும் ஹீரோவாக அறிமுகமானார்.

கெளதம் கார்த்திக், துளசி நாயர் ஆகியோருடன் அர்ஜுன், அரவிந்த் சாமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏஆர் ரஹ்மான் இசையில் கடல் படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தன. இதனால் மிகப் பெரிய வெற்றிப் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட கடல், மிக மோசமான தோல்வியைத் தழுவியது. அதேநேரம் கடல் ஹீரோ கெளதம் கார்த்திக் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார்.

ஆனால், நாயகி துளசிக்கு அடுத்து யான் படத்தில் மட்டுமே நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. ஜீவா ஹீரோவாக நடித்த இந்தப் படமும் துளசி நாயருக்கு மிக மோசமான தோல்வியை கொடுத்தது. 1980, 90களில் கோலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ராதா. ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, மோகன், என டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஆனால், அவரது மகளான துளசி இரண்டே படங்களில் ஃபீல்ட் அவுட் ஆனார்.

அதேபோல், துளசி நாயரின் அக்கா கார்த்திகாவும் கோ, அன்னக்கொடி, புறம்போக்கு என்கிற பொதுவுடமை உட்பட சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இந்நிலையில் கார்த்திகாவுக்கு சில தினங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. ரோஹித் மேனன் என்பவருடன் நடந்த திருமணத்தில் கோலிவுட், டோலிவுட், மல்லுவுட் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இந்த திருமண விழாவில் கார்த்திகாவின் தங்கையான துளசியும் பங்கேற்றார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. கடல், யான் படங்களில் செம்ம ஸ்லிம் ஃபிட்டாக இருந்த துளசி, ரசிகர்களின் கனவுக் கன்னியாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் நல்ல வெயிட் போட்டு, அவரது அம்மா ராதாவை போல பருமனாக காணப்படுகிறார். துளசி நாயரின் இந்த வீடியோவைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X