22 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளாவில் ரீரிலீஸ் செய்யப்பட்ட துள்ளாத மனமும் துள்ளும். நெகிழ்ச்சி பதிவு!
சென்னை : நடிகர் விஜய்க்கு ஆரம்ப கட்டத்தில் ஹீரோ அந்தஸ்தை கொடுத்த பல திரைப்படங்களில் மிக முக்கியமான ஒன்று துள்ளாத மனமும் துள்ளும்
இயக்குனர் எழிலின் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சிம்ரன் பார்வையற்ற பெண்ணாக நடித்து இருப்பார்
மிகச் சிறந்த காதல் திரைப்படமாக அன்று கொண்டாடப்பட்ட துள்ளாத மனமும் துள்ளும் 22 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளாவில் மீண்டும் ரீரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

தன்னால் பார்வை பறிபோன ஒரு பெண்ணுக்கு
தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை இயக்கி வருபவர் இயக்குனர் எழில். கடந்த 1999ஆம் ஆண்டு எழில் இயக்கத்தில் உருவான துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தில் விஜய் ஹீரோவாக நடித்திருந்தார். வேலைக்கு போராடும் ஒரு சாதாரண இளைஞனாக குட்டி என்ற கதாபாத்திரத்தில் விஜய் இதில் நடித்திருக்க அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருப்பார். மேலும் மணிவண்ணன், பொண்ணம்பலம், தாமு, வையாபுரி, மதன்பாப் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். ஒரு சந்தர்ப்பத்தில் தன்னால் பார்வை பறிபோன ஒரு பெண்ணுக்கு மீண்டும் பார்வை கொண்டு வந்து , அவர் விரும்பியது போலவே கலெக்டர் ஆக்கி பார்ப்பதே இப்படத்தின் கதை.

துள்ளாத மனமும் துள்ளும்
நடிகர் விஜய்யின் ஆரம்ப கட்டத்தில் ஹீரோ அந்தஸ்தை கொடுத்த சில திரைப்படங்களில் துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் முக்கியமான ஒன்று. மிகச் சிறந்த கதை,திரைக்கதை,காமெடி என வெளியான துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் முதலில் நடிகர் வடிவேலுவை தான் நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டு இருந்தது. பின்பு அந்தக் கதையில் விஜய் நடிக்க அந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

கேரளாவிலும் பல கோடி ரசிகர்கள்
தமிழில் கலக்கிய இந்த திரைப்படம் கேரளாவிலும் வெளியாகி சக்கைபோடு போட்டது. விஜய்க்கு கேரளாவில் இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் பட்டாளம் பல மடங்கு உயர்ந்தது. இன்றும் தமிழ் ரசிகர்களுக்கு இணையாக கேரளாவிலும் பல கோடி ரசிகர்கள் விஜய்க்கு இருக்க இவரது நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படங்களும் கேரளாவிலும் வெளியாகி வசூலை அள்ளுகிறது.

22 ஆண்டுகளுக்குப் பிறகு ரீரிலீஸ்
இந்த நிலையில் விஜய் ரசிகர்களின் ஃபேவரைட் ஆக இருக்கும் துள்ளாத மனமும் துள்ளும் கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரீரிலீஸ் செய்யப்பட்டது. கேரளாவில் திருவனந்தபுரத்தில் உள்ள கலபவன் என்ற திரையரங்கில் துள்ளாத மனமும் துள்ளும் கடந்த டிசம்பர் 19ஆம் தேதி ரீரிலீஸ் செய்யப்பட்டதை இயக்குனர் எழில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ந்தார்.


Click it and Unblock the Notifications











