தனுஷ் போல வந்திருக்க வேண்டியவரு.. துள்ளுவதோ இளமை நடிகருக்கு இப்படியொரு நோயா?.. நடிகர் சங்கம் உதவுமா?

சென்னை: கஸ்தூரி ராஜா இயக்கத்தில் செல்வராகவன் திரைக்கதையில் தனுஷ் நடித்து வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் சாக்லெட் பாயாக நடித்தவர் தான் நடிகர் அபிநய். அந்த படத்தில் தனுஷுக்கு அடுத்தபடி லீடு ரோலில் நடித்து அசத்தியவர் பல கனவுகளுடன் கோடம்பாக்கத்தில் பல ஆண்டுகளாக சுற்றியும் அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள அவர் தனது உயிரை காப்பாற்ற தேவையான சிகிச்சைக்கு பணம் கொடுத்து உதவுங்கள் என உருக்கமாக சினிமா நண்பர்களுக்கு கோரிக்கை வைத்து வெளியிட்டுள்ள வீடியோ அனைவரையும் உலுக்கி வருகிறது.

Abhinay Kinger Dhanush Thulluvatho Ilamai

எப்படி இருக்க வேண்டிய நபர் இப்படி கஷ்டப்படுகிறாரே என்றும் நடிகர் தனுஷ் உதவி செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் நடிகர் அபிநவ்வை காப்பாற்ற வலியுறுத்தி வருகின்றனர்.

கல்லீரல் பாதிப்பு: 2002ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் விஷ்ணு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் தான் அபிநய் கிங்கர். அந்த படத்தில் நடித்த ஷெரின் சில படங்களில் நடித்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகும் அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. காதல் கொண்டேன் படத்தின் நடிகர் சுதீப் சாராங்கி பட வாய்ப்புகள் கிடைக்காமல் அவதிப்படுவதாக சில ஆண்டுகளுக்கு முன் தெரிய வந்த நிலையில், தற்போது துள்ளுவதோ இளமை பட நடிகர் அபிநய் கல்லீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் மற்றும் மலையாள படங்கள்: துள்ளுவதோ இளமை படத்திற்கு பிறகு ஜங்ஷன் எனும் படத்தில் நடித்த அபிநய் அதன் பின்னர் மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் சக்சஸ், சிங்கார சென்னை, தாஸ், பொன் மேகலை, தொடக்கம், சொல்ல சொல்ல இனிக்கும், பாலை வன சோலை, ஆறுமுகம், கார்த்திக் அனிதா, ஆரோகணம், என்றென்றும் புன்னகை, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், 2014ம் ஆண்டுக்கு பிறகு இவருக்கு எந்தவொரு பட வாய்ப்புகளும் கடந்த 11 ஆண்டுகளில் கிடைக்கவே இல்லை. மேலும், அவர் நடித்த படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரங்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Abhinay Kinger Dhanush Thulluvatho Ilamai

சிகிச்சைக்கு உதவுங்க: லிவர் சிரோசிஸ் எனப்படும் கல்லீரல் பாதிப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ள அபிநய் கிங்கர் வறுமை காரணமாக அம்மா உணவகத்தில் சாப்பிட்டு வந்ததாகவும் தனக்கு அப்பா மட்டுமே உதவி செய்து வந்ததாகவும் தனது உயிரை காப்பாற்ற தேவையான சிகிச்சைக்கு 28 லட்சம் தேவைப்படுகிறது. ஏற்கனவே மருத்துவ செலவுகளுக்காக முடிந்த வரை 15 லட்சம் செலவு செய்துவிட்டோம் என்றும் திரையுலக நண்பர்கள் தனக்கு பணம் கொடுத்து உதவுங்கள் என மன்றாடி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

ரசிகர்கள் கோரிக்கை: நடிகர் தனுஷ் கோடிக் கணக்கில் சம்பாதிக்கும் ஹீரோவாக உள்ளார். அவருடன் சினிமாவில் அடியெடுத்து வைத்த அபிநய் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில், தனுஷ் அவரது மருத்துவ செலவுகளுக்கு உதவி செய்ய வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும், விஷால் நடிகர் சங்கம் மூலமாக நலிவடைந்த இந்த சினிமா கலைஞருக்கு உதவி செய்திட வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர்களுக்கே இப்படியொரு மோசமான நிலை வருகிறது என்றால் அன்றாடம் உழைக்கும் அடிமட்ட தொழிலாளிகளின் நிலை என்ன என்கிற கேள்விகளும் எழுகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X