துள்ளுவதோ இளமை நடிகர் மரணம்.. ஆதரவற்ற நிலையில் உடல்.. KPY பாலாவின் முயற்சிகள் எல்லாம் வீண்

சென்னை: துள்ளுவதோ இளமை படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நடிகர்களில் ஒருவர் அபிநய். இவர் இன்று அதாவது நவம்பர் 10ஆம் தேதி உடல் நலக் குறைவால் அதிகாலை 4 மணியளவில் உயிரிழந்தார். இவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாததால், அவரது உடலை நல்லடக்கம் செய்ய யாரும் முன் வராததால், அவரது உடல் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது மட்டும் இல்லாமல், நடிகர் அபிநயின் மரணம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள், நடிகர் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் இவரது உடலை நல்லடக்கம் செய்தால் நன்றாக இருக்கும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள். நடிகர் KPY பாலா சில மாதங்களுக்கு முன்னர், நடிகர் அபிநயின் உடல்நிலை குறித்து தெரிந்து கொண்டு அவருக்கு மருத்துவ உதவிகளும், நிதி உதவியும் செய்து வந்தார். இவருக்கு கல்லீரல் பாதிப்பு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Thulluvatho Ilamai Actor abhinayPassed Away Due To Health Issues

2002ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் தான் அபிநய் அறிமுகமானார். இவரது முழுபெயர் அபிநய் கிங்கர். அதன் பின்னர் பல படங்களில் துணை கதாபாத்திரங்களாவே நடித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாததால் வருமானம் இன்றி தவித்தார். இதற்கிடையில் அவருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்படவே, உடல் நலன் தொடர்ந்து குன்றி வந்தது. உதவி கேட்டு வீடியோ எல்லாம் வெளியிட்டார், அபிநய் கிங்கர்.

கல்லீரல் பாதிப்பு: அந்த வீடியோவில், லிவர் சிரோசிஸ் எனப்படும் கல்லீரல் பாதிப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ள அபிநய் கிங்கர் வறுமை காரணமாக அம்மா உணவகத்தில் சாப்பிட்டு வந்ததாகவும் தனக்கு அப்பா மட்டுமே உதவி செய்து வந்ததாகவும் தனது உயிரை காப்பாற்ற தேவையான சிகிச்சைக்கு 28 லட்சம் தேவைப்படுகிறது. ஏற்கனவே மருத்துவ செலவுகளுக்காக முடிந்த வரை 15 லட்சம் செலவு செய்துவிட்டோம் என்றும் திரையுலக நண்பர்கள் தனக்கு பணம் கொடுத்து உதவுங்கள் என மன்றாடி கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

கே.பி.ஒய் பாலா: இவர் இவ்வாறு வீடியோ வெளியிட்டப் பின்னர், கேபிஒய் பாலா நிதி உதவி செய்தார். இது மட்டும் இல்லாமல் மருத்துவச் செலவுகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து வந்தார். தனது படமான காந்தி கண்ணாடி படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் அபிநய்யை சிறப்பு அழைப்பாளராக அழைத்து, அவருக்கு தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார். மேலும் அபிநய்யை நோக்கி நீங்கள் நம்பிக்கையுடன் இருங்கள், விரைவில் குணமாகி படங்களில் கதாநாயகனாக கம்பேக் கொடுப்பீர்கள் என்று நம்பிக்கையும் தெரிவித்திருந்தார். ஆனால் அவரது நம்பிக்கையும் முயற்சிகளும் தற்போது நிறைவேறவில்லை. மாறாக அபிநய் கிங்கர் கல்லீரல் பாதிப்பால் மரணமடைந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X