'ஒல்லி என என் உருவத்தை வைத்து கேலி செய்தனர்'... விழா மேடையிலேயே கதறி அழுத வாரிசு நடிகையால் பரபரப்பு!

தனது உருவம் பற்றி பலரும் விமர்சனம் செய்ததாகக் கூறி நடிகை கீர்த்தி பாண்டியன் விழா மேடையில் கதறி அழுதார்.

Recommended Video

மேடையில் கண்கலங்கிய தும்பா பட நடிகை கீர்த்தி பாண்டியன்-வீடியோ

சென்னை: தும்பா படத்தின் செய்தியாளர் சந்திப்பில் அப்படத்தின் நாயகி கீர்த்தி பாண்டியன் மேடையிலேயே கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஹரீஷ் ராம் இயக்கத்தில் தர்ஷன், கீர்த்தி பாண்டியன், தீனா உள்ளிட்டோர் நடித்துள்ளப் படம் தும்பா. முழுக்க முழுக்க டாப்ஸ்லிப் உள்ளிட்ட வனப் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இந்த படத்தில், புலி, குரங்கு, காட்டெருமை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் கிராபிக்ஸ் வடிவில் இடம்பெற்றுள்ளன.

குழந்தைகளை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள தும்பா திரைப்படம் வரும் 21ம் தேதி ரிலீசாகிறது. இதையொட்டி படக்குழு நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். படத்தில் காமெடியனாக நடித்துள்ள தீனா தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

படக்குழுவினரை ஒவ்வொருவராக மேடைக்கு அழைத்து பேச வைத்தார். தனது பாணியில் எல்லோரையும் தீனா கலாய்த்துக்கொண்டிருந்தார். படத்தின் ஹீரோயின் கீர்த்தி பாண்டியனை பேச அழைக்கும் போது 'தும்பாவின் ரம்பா' என தீனா குறிப்பிட்டார்.

பின்னர் பேச வந்த கீர்த்தி, படப்பிடிப்பின் போது நிகழ்ந்த சம்பவங்களை பகிர்ந்துகொண்டார். தன்னுடன் பணியாற்றிய ஒவ்வொருவருக்கும் நன்றி கூறினார். அப்போது, படத்தின் ஹீரோயின் கீர்த்தி பாண்டியன் மேடையிலேயே அழுதார்.

நெருங்கிய நண்பர்கள்:

நெருங்கிய நண்பர்கள்:

தும்பா படத்தில் பணியாற்றியதன் மூலம் தர்ஷன் மற்றும் தீனா ஆகியோர் நெருங்கிய நண்பர்களாகிவிட்டதாக அவர் கூறிய அவர், படப்பிடிப்பின் போது தனக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டதாகக் கூறினார்.

கதறி அழுத கீர்த்தி

கதறி அழுத கீர்த்தி

இயக்குனர் ஹரீஷ் ராம் பற்றி பேச துவங்கியதும் தன்னை அறியாமல் அழத் தொடங்கிவிட்டார் கீர்த்தி. தீனாவும், பாலாவும் அவரை தேற்றினர். இருப்பினும் கட்டுக்கடங்காத வெள்ளம் போல், அவரது கண்களில் இருந்து கண்ணீர் தாரைத்தாரையாக ஊற்றியது.

நிறைய கதைகள் கேட்டேன்

நிறைய கதைகள் கேட்டேன்

தன்னை தேற்றிக்கொண்டு பின்னர் பேசிய அவர், " நான் நடிக்க வேண்டும் என முடிவு செய்ததில் இருந்து, நிறைய கதைகள் கேட்டிருக்கிறேன். நிறைய கதைகளை நான் நிராகரித்திருக்கிறேன். நிறைய இயக்குனர்கள் என்னை நிராகரித்துள்ளனர்.

உருவத்தைக் கூறி நிராகரித்தனர்

உருவத்தைக் கூறி நிராகரித்தனர்

என்னை நிராகரிக்க அவர்கள் கூறிய காரணம் எனது உருவம் தான். ஒல்லியாக இருக்கிறாய். கருப்பு நிறமாக இருக்கிறாய் எனக் கூறி என்னை நிராகரித்தனர். இதனால் நான் மனமுடைந்து போனேன். பெரிய இயக்குனர்கள் பலர் என்னை நிராகரித்தனர்.

இயக்குனர் ஹரீஷ்

இயக்குனர் ஹரீஷ்

ஆனால் ஹரீஷ் தான் என் உருவத்தை பற்றி எதுவும் குறை கூறாமல் என்னை ஹீரோயினாக தேர்வு செய்தார். முதலில் எனக்கு நம்பிக்கையே இல்லை. பிறகு இயக்குனர் தான் எனக்கு தன்னம்பிக்கை கொடுத்து நடிக்க வைத்தார்.

ஷாட்ஸ் போட்டு நடித்தேன்

ஷாட்ஸ் போட்டு நடித்தேன்

இந்த படத்தில் 99 சதவீதக் காட்சிகளில் நான் ஷாட்ஸ் போட்டு நடித்துள்ளேன். எனக்கு அது செட்டாகுமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் இயக்குனர் தான் நம்பிக்கை வார்த்தைகள் கூறி என்னை சமாதானப்படுத்தினார். அவருக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்", என கீர்த்தி கூறினார்.

உண்மையில் அழுதார்

உண்மையில் அழுதார்

விழா மேடையில் கீர்த்தி அழுததால், அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. முதலில் விளையாட்டுக்காக கீர்த்தி அப்படி நினைக்கிறார் என்றே அனைவரும் நினைத்தனர். ஆனால் தன்னுடைய தோற்றம் குறித்து உருக்கமாக பேசியதும் தான் உண்மையில் அவர் அழுகிறார் என்பது தெரிந்தது. நடிகை கீர்த்தி பாண்டியன் நடிகர் அருண்பாண்டியனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X