1 மில்லியன் வியூஸ்.. 1 லட்சம் லைக்ஸ்.. இன்னும் ட்ரென்டிங்.. வேற லெவலில் ஹிட்டாகும் தும்பி துள்ளல்!
சென்னை: கோப்ரா படத்தில் இடம்பெற்றுள்ள தும்பி துள்ளல் பாடல் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களை பெற்றுள்ளது.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் கோப்ரா. இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இந்தப் படம் உருவாகி வருகிறது.இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக 'கே.ஜி.எப்' புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார்.

கோப்ரா படத்தின் மூலம் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதானும் நடிகராக அறிமுகமாகிறார். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. அதில் 7 கெட்டப்புகளில் தோன்றி நடிகர் விக்ரம் மிரள வைத்தார்.

மே மாதம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்த இப்படம், கொரோனா லாக்டவுனால் தள்ளிப்போயுள்ளது. மேலும் படத்தின் 25 சதவீத படப்பிடிப்புகள் இன்னும் நிறைவடையாமல் உள்ளதாகவும் கூறப்பட்டது. கோப்ரா படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் அப்படத்தின் தும்பி துள்ளல் என்ற பாடல் நேற்று முன்தினம் வெளியானது. மேலோடியான இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தப் பாடல் தற்போது வரை 16 லட்சம் வியூஸ்களை அள்ளியிருக்கிறது.
மேலும் ஒரு லட்சம் லைக்ஸ்களையும் குவித்துள்ளது. மேலும் யூட்யூப் ட்ரெண்டிங்கிலும் இந்தப் பாடல் தற்போது வரை நான்காம் இடத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications











