தும்பி துள்ளல்.. ஏஆர் ரஹ்மான் இசையில் வெளியானது விக்ரமின் கோப்ரா பட பாடல்!
சென்னை: ஏஆர் ரஹ்மான் இசையில் கோப்ரா படத்தில் இடம்பெற்றுள்ள தும்பி துள்ளல் பாடல் வெளியாகியுள்ளது.
Recommended Video
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் கோப்ரா. இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இந்தப் படம் உருவாகி வருகிறது.

கோப்ரா படத்தின் மூலம் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதானும் நடிகராக அறிமுகமாகிறார். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது.
அதில் 7 கெட்டப்புகளில் தோன்றி நடிகர் விக்ரம் மிரள வைத்தார். மே மாதம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்த இப்படம், கொரோனா லாக்டவுனால் 25 சதவீத படப்பிடிப்புகள் இன்னும் நிறைவடையாமல் உள்ளது.
சாத்தான்குளம் போலீசார் மீது கொலைவழக்கு பதிந்து விசாரணையை தொடங்க வேண்டும்: உதயநிதி
கோப்ரா படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் அப்படத்தின் தும்பி துள்ளல் என்ற பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. மேலோடியான இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கோப்ரா படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் சியான் 60 படத்தில் நடிக்கவுள்ளார் விக்ரம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











