Don't Miss!
- News
"ஹிட்லர் தெரியுமா உங்களுக்கு.. மோடிக்கும் அதே கதிதான்.." சித்தராமையா சொன்னதும்.. கொதித்தெழுந்த பாஜக
- Sports
U-19 மகளிர் உலக கோப்பை- 59 ரன்களில் சுருண்ட இலங்கை.. இந்திய அணி அபார வெற்றி
- Finance
Budget 2023:பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் 5 முக்கிய அறிவிப்புகள்..!
- Automobiles
டாடா எலெக்ட்ரிக் கார்களின் கதையை முடிக்க போகுது! மிகவும் விலை குறைவான மாடலுக்கு புக்கிங் தொடக்கம்!
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் பிப்ரவரி 15 வரை இந்த 5 ராசிக்கு அட்டகாசமா இருக்கும்...
- Technology
கேப் விடாமல் தூள் கிளப்பும் ரெட்மி: மொத்த பேரின் கவனத்தையும் ஈர்க்கும் டர்போ ஸ்மார்ட்போன்!
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
ப்பா.. நீச்சல் குளத்தில் தூள் கிளப்பிய துணிவு நடிகர்.. மனைவிக்கு என்னம்மா கிஸ் கொடுக்குறாரு!
சென்னை: பாகுபலி, கேஜிஎஃப், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல படங்களில் நடித்து மிரட்டி வரும் நடிகர் ஜான் கொக்கன் தனது மனைவி விஜே பூஜா ராமசந்திரன் உடன் நீச்சல் குளத்தில் முத்த மழை பொழிந்து இருக்கும் வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலியாக நடித்து மிரட்டிய நடிகர் ஜான் கொக்கன் துணிவு படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், தனது மனைவியுடன் நீச்சல் குளத்தில் முத்தக் குளியல் போட்டுள்ள வீடியோவை ஷேர் செய்துள்ளார்.
இதெல்லாம் சரியா வருமா… சீண்டிய பாகுபலி ஹீரோ: கதை சொல்லி மிரட்டிய லோகேஷ் கனகராஜ்

வேம்புலி
துணை நடிகராகவும் அடியாளாகவும் நடித்த வந்த ஜான் கொக்கனுக்கு மிகப்பெரிய ரோல் என்றால் அது சார்பட்டா பரம்பரை படத்தில் அவருக்கு கிடைத்த வேம்புலி கதாபாத்திரம் தான். ஆறடி உயர ஹல்க் மாதிரி இருக்கும் ஜான் கொக்கன் தீவிர அஜித் ரசிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இந்நிலையில், அஜித்தின் துணிவு படத்திலும் ஜான் கொக்கனுக்கு முக்கிய ரோல் கிடைத்துள்ளது.

துணிவு படத்தில்
அஜித்தின் வீரம் படத்திலேயே அடியாளாக நடித்திருந்த ஜான் கொக்கன் துணிவு படத்தில் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும், துணிவு படத்தின் டப்பிங் முடிந்தது என்றும் போட்டோக்களை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை தெரிவித்து இருந்தார். இந்நிலையில், தனது மனைவியுடன் ஜாலி பண்ணும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அப்படியொரு காதல்
எஸ் எஸ் மியூசிக் விஜேவான பூஜா ராமசந்திரன் சக விஜேவான கிரெய்கை திருமணம் செய்து கொண்டார். ஆனால், இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கிரெய்கை விவாகரத்து செய்த பூஜா அடுத்து ஜான் கொக்கனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இருவரும் ரொம்பவே நெருக்கமாக வாழ்ந்து வருவதை அடிக்கடி போட்டோக்களாக போட்டு தங்கள் காதலை வெளிப்படுத்தி வருகின்றனர்.

நீச்சல் குளத்தில் குளியல்
அடிக்கடி பிகினி உடைகளை அணிந்து கொண்டு நீச்சல் குளம் அருகே பூஜா ராமசந்திரன் தனது கணவர் ஜான் கொக்கனுடன் போஸ் கொடுத்த வந்த நிலையில், தற்போது கணவரை கட்டி அணைத்துக் கொண்டு அவருடன் படு ஜாலியாக குளிக்கும் வீடியோவையே ஷேர் செய்து ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.

முத்த மழை
நீச்சல் குளத்தில் கணவனும் மனைவியும் மாறி மாறி முத்த மழை பொழிந்துள்ள வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை பொறாமைப்பட வைத்துள்ளனர். இதெல்லாம் ரொம்ப மோசம்ப்பா வேம்புலி என ரசிகர்கள் வயித்தெறிச்சல் படுவது போன்ற கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர். மேலும், உங்க ஜோடி செம சூப்பர் பார்க்கவே பொறாமையா இருக்கு என்றும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

இப்படியே இருங்க
அஜித்தின் துணிவு, ஹன்சிகாவின் ரவுடி பேபி என பிசியாக நடித்து வருகிறார் ஜான் கொக்கன். மனைவி பூஜா ராமசந்திரன் உடன் அவர் நீச்சல் குளத்தில் செய்யும் ரொமாண்டிக் சேட்டை வீடியோவை பார்த்த ரசிகர்கள் இப்படியே சந்தோஷமா இருங்க என வாழ்த்தி வருகிகின்றனர். லைக்குகளும், ஹார்ட்டீன்களும் எகிறி உள்ளன.