John Kokken: நான் வில்லனா இருக்கலாம்.. ஆனால், என் மகனுக்கு நான் தான் ஹீரோ.. உருக வைத்த ஜான் கொக்கன்!

சென்னை: சார்பட்டா பரம்பரை, துணிவு உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ள ஜான் கொக்கன் தனது மகனை தூக்கி வைத்துக் கொண்டு வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

வீரம் முதல் பாகுபலி வரை சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தவர் நடிகர் ஜான் கொக்கன். கேஜிஎஃப் 2வில் ஸ்ரீநிதி ஷெட்டியின் கையை பிடித்து இழுக்கும் இவரது கையைத்தான் ராக்கி பாய் வெட்டி வீசுவார்.

அடியாளாக நடித்து வந்த ஜான் கொக்கன் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலியாக நடித்து பிரபலமானார்.

Thunivu actor John Kokken reveals his son face for the first time

துணிவு வில்லன்: சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கனை ரசிகர்கள் பலரும் வேம்புலி என்றே அழைத்து வருகின்றனர். அந்த அளவுக்கு அந்த கதாபாத்திரம் அவருக்கு பெரியளவுக்கு பெயரை பெற்றுத் தந்தது.

வேம்புலியாக நடித்த ஜான் கொக்கன் அஜித்தின் துணிவு படத்தில் வங்கியின் அதிபராகவும் நடித்து அஜித்துக்கே வில்லனாக மாறினார். கேப்டன் மில்லர் உள்ளிட்ட பல படங்களிலும் ஜான் கொக்கன் வில்லனாக நடித்து வருகிறார்.

பூஜா ராமசந்திரனின் கணவர்: எஸ்எஸ் மியூசிக் தொகுப்பாளினி பூஜா ராமசந்திரனை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னதாக 2வதாக திருமணம் செய்துக் கொண்டார் ஜான் கொக்கன்.

இந்த நட்சத்திர தம்பதியினருக்கு சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு கியான் கொக்கன் எனப் பெயரிட்டுள்ளனர். இந்நிலையில், தனது மகனை தூக்கி வைத்துக் கொண்டு ஜான் கொக்கன் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் க்யூட் போட்டோ ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

John Kokken

என் மகனுக்கு நான் ஹீரோ: நான் நடிக்கும் படங்களில் நான் வில்லனாக இருக்கலாம். ஆனால், என் மகனுக்கு நான் தான் ஹீரோ என ரொம்பவே உருக்கமான கேப்ஷனை பதிவிட்டு நடிகர் ஜான் கொக்கன் தனது மகனை தூக்கி வைத்துக் கொஞ்சும் போட்டோவை ஷேர் செய்து லைக்குகளை அள்ளி வருகிறார்.

கியான் ரொம்பவே க்யூட்டா இருக்கார் என ஜான் கொக்கனின் ரசிகர்கள் பலரும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X