என்னதான் முரட்டு வில்லனா இருந்தாலும்.. குழந்தைக்கிட்ட குத்து வாங்கித்தான் ஆகணும்.. வேம்புலி மகன்!
சென்னை: சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகர் ஜான் கொக்கன் தனது மகனுடன் வீட்டில் விளையாடும் புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகர் அஜித்தின் வீரம் படத்தில் சாதாரண அடியாள் கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கன் இந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் மெயின் வில்லன் ஆகவே நடித்து இருந்தார்.

நடிகர் அஜித்தின் தீவிர ரசிகன் நான் என்பதை அடிக்கடி சொல்லி வரும் ஜான் கொக்கன் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் மிரட்டி வருகிறார்.
துணிவு வில்லன்: எஸ் எஸ் மியூசிக் விஜே பூஜாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட ஜான் கொக்கன் தொடர்ந்து தனது மனைவியின் கர்ப்பகால போட்டோஷூட்களை வெளியிட்டு வந்தார். சமீபத்தில், நடிகை பூஜா ஆண் குழந்தையை பெற்றெடுத்த நிலையில், அந்த குழந்தைக்கு கியான் கொக்கன் எனப் பெயரிட்டனர்.

இந்நிலையில், தற்போது ஷுட்டிங் பிசியில் இருந்து வீட்டுக்கு வந்து தனது மகனுடன் நேரத்தை செலவிட்டு வரும் வேம்புலியை அவரது குட்டிப்புலி முகத்தில் குத்து விடுவதுமாக, கீறுவதுமாக ஏகப்பட்ட சேட்டைகளை செய்து வருகிறார்.
குழந்தையுடன் விளையாட்டு: டைகர் கா ஹுகும் என கேப்ஷன் கொடுத்து தனது மகனின் க்யூட்டான சேட்டை போட்டோக்களை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு லைக்குகளை அள்ளி உள்ளார் நடிகர் ஜான் கொக்கன்.
நடிகை ஹன்சிகாவின் ரவுடி பேபி படத்தில் வில்லனாக நடித்து வரும் ஜான் கொக்கன், தனுஷ், பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்திலும் நெகட்டிவ் ரோலில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

குட்டி வேம்புலி: ஜான் கொக்கன் தனது மகனுடன் விளையாடும் புகைப்படங்களை பார்த்த சார்பட்டா பரம்பரை பட நடிகர் சந்தோஷ் பிரதாப்பும் லைக் போட்டுள்ளார். ஏகப்பட்ட சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் ஜான் கொக்கன் மகன் செம க்யூட் என்றும் குட்டி வேம்புலி என்றும் கமெண்ட் போட்டு வருகின்றனர். இந்த ஆண்டு துணிவு, வீர சிம்ஹா ரெட்டி படங்கள் ஜான் கொக்கன் நடிப்பில் வெளியாகி உள்ள நிலையில், மேலும், சில படங்களும் ரிலீசுக்கு காத்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications











