ஷாக்கிங்.. மாரடைப்பு காரணமாக துணிவு பட நடிகர் காலமானார்.. சோகத்தில் திரையுலகம்
மும்பை: இந்தி டிவி சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகர் ரித்துராஜ் சிங் (Rituraj Singh) காலமானார். அவருக்கு வயது 59. நடிகர் அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான துணிவு படத்தில் முக்கிய வேடத்தில் இவர் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். ரித்துராஜ் சிங்கின் மறைவு சினிமா மற்றும் சின்னத்திரை உலகத்தை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
சினிமா பிரபலங்கள் பலர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து வருகின்றனர். 40 முதல் 60 வயதுக்குள் நடிகர்கள், இயக்குநர்கள், காமெடியன்கள் என பலர் உயிரிழப்பது ரசிகர்களையும் சினிமா பிரபலங்களையும் சோகத்தில் ஆழ்த்தி வருகிறது.

சமீபத்தில் நடிகர் அஜித்தின் நெருங்கிய நண்பர் வெற்றி துரைசாமி உயிரிழந்தது அஜித்தை மனவேதனையில் ஆழ்த்தியது. இந்நிலையில், அஜித்துடன் இணைந்து துணிவு படத்தில் நடித்த நடிகர் ரிதுராஜ் சிங் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.
ரித்துராஜ் சிங் காலமானார்: இந்தி சீரியல்களில் பிரபலமானவர் ரித்துராஜ் சிங். பாலிவுட்டிலும் பல படங்களில் இவர் நடித்துள்ளார். 59 வயதான நடிகர் ரித்துராஜ் சிங் கணைய அழற்சி (Pancreatic disease) பாதிப்பு காரணமாக சில நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பல ஆண்டுகள் பிரபலமாக இருந்து வந்த ரித்துராஜ் சிங் திடீரென உயிரிழந்தது பல பிரபலங்களையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சோஷியல் மீடியா மூலம் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
துணிவு பட வில்லன்: எச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்து கடந்த ஆண்டு வெளியான துணிவு படத்தில் சுனில் தத்தா எனும் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருப்பார் ரித்துராஜ் சிங். மெயின் வில்லனான ஜான் கொக்கனுடன் சேர்ந்து வங்கி பணத்தை ஆட்டையை போடும் மூவரில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் அஜித் இவரை அடித்து வெளுக்கும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன.
சீரியல் முதல் வெப்சீரிஸ் வரை: வருண் தவான் நடிப்பில் வெளியான பத்ரிநாத் கி துல்ஹனியா திரைப்படத்தில் ஹீரோவின் அப்பாவாக நடித்திருப்பார். ஜான் ஆபிரகாமின் சத்யமேவ ஜயதே, யாரியான் 2 உள்ளிட்ட பாலிவுட் படங்களில் நடித்துள்ள இவர் ஏகப்பட்ட டிவி சீரியல்களில் நடித்து பிரபலமானவர். ஹே பிரபு, கிரிமினல் ஜஸ்டிஸ், அபய், நெவர் கிஸ் யுவர் பெஸ்ட் ஃபிரெண்ட் மற்றும் மேட் இன் ஹெவன் உள்ளிட்ட ஏகப்பட்ட வெப்சீரிஸ்களிலும் இவர் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











