Don't Miss!
- News
பறவையா பறக்குறோம்.. 4,500 கி.மீ தூரம் பறந்து.. எகிப்திலிருந்து இங்கிலாந்து வந்த பல்லி! வால் மிஸ்ஸிங்
- Sports
நியூசிக்கு எதிரான டி20 தொடர்.. அக்சர் பட்டேல் இடத்தில் யார்? 3 வீரர்களுக்கு இடையே போட்டி
- Finance
மதுரை IT நிறுவனத்தை வாங்கிய ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ்.. இனி வளர்ச்சி எப்படியிருக்கும்?
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Technology
50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: பட்ஜெட் விலை.!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
துணிவு, வாரிசு படத்தின் டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா? ஷாக்கான ரசிகர்கள் !
சென்னை : அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு படத்தின் டிக்கெட் விலையை கேட்டு ரசிகர்கள் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11ந் தேதி வெளியாக உள்ளது.
அதே போல எச் வினோத் இயக்கிய துணிவு படமும் அதே தேதியில் வெளியாக உள்ளதால், இவ்விரு படங்களைப் பார்க்க ரசிகர்கள் போட்டிப்போட்டுக் கொண்டு டிக்கெட்டை வாங்கி வருகின்றனர்.
வாரிசு..துணிவு..இரண்டுமே நல்லா ஓடணும்...எச்.வினோத்தின் சுவாரசிய பேட்டி!

துணிவா,வாரிசா
வீரம், ஜில்லா படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் - அஜித் படங்கள் நேருக்கு நேர் மோத உள்ளது. இரண்டு படங்களும் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவித்ததில் இருந்தே துணிவா...வாரிசா என ரசிகர்கள் போட்டா போட்டி போடத் தொடங்கிவிட்டனர். இணையத்தில் இரு ரசிகர்களுக்கு மத்தியில் ஒரு யுத்தமே நடந்தது எனலாம்.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
வாரிசு திரைப்படத்தில் இருந்து பர்ஸ்ட் லுக்போஸ்டர், பாடல் என அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளிவந்த நிலையில், துணிவு திரைப்படத்தின் அப்டேட்டை கேட்டு ரசிகர்கள் சோஷியல் மீடியாவை திணறடித்தார்கள் இதையடுத்து, ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலுக்கு போட்டியாக சில்லா சில்லா பாடல் வெளியானது. இந்த இரண்டு பாடல்களுமே சோஷியல் மீடியாவில் ஹிட்டடித்தது.

எந்த படத்தைப் பார்ப்பது
இதையடுத்து வாரிசு திரைப்படம் ஜனவரி 12ந் தேதியும், துணிவு ஜனவரி 11ந் தேதியும் வெளியாகும் என்று பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் திடீரென வாரிசு படம் ஜனவரி 11ந் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. இதனால்,எந்த படத்தை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் சினிமா ஆர்வலர்கள் இருக்கிறார்கள்.

போட்டி போடும் ரசிகர்கள்
இந்நிலையில், வாரிசு மற்றும் துணிவு திரைப்படத்திற்கான முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் அதிகாலை ஒரு மணி மற்றும் நான்கு மணி காட்சி திரையிடப்பட உள்ளதால், ரசிகர்கள் போட்டி போட்டு கொண்டு டிக்கெட்டுகளை வாங்கி வருகின்றனர்.

ஷாக்கான ரசிகர்கள்
படம் வெளியாக இன்னும் 3 நாட்களே உள்ளதால், முதல் நாள் முதல் ஷோவைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளதால், டிக்கெட்டின் விலை 2 ஆயிரம் ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. வழக்கமாக பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆனாலே முதல் ஷோ டிக்கெட்டின் விலை அதிகமாகத்தான் இருக்கும் என்றாலும் இது ரொம்ப ஓவர் என்று பொதுமக்கள் கருத்து கூறி வருகின்றனர்.