Thunivu Box office day 2: இரண்டே நாளில் வசூலில் மாஸ் காட்டிய அஜித்... மொத்தம் இத்தனை கோடியா?

சென்னை: அஜித் ரசிகர்களின் பல நாள் எதிர்பார்ப்பு 11ம் தேதி நனவானது. ஹெச் வினோத் இயக்கத்தில் அவர் நடித்துள்ள 'துணிவு' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. அதேபோல், பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் அஜித் மீண்டும் வெறித்தனமான கம்பேக் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அதேபோல், பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் அஜித் மீண்டும் வெறித்தனமான கம்பேக் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அஜித்தின் ஒன்மேன் ஷோ

அஜித்தின் ஒன்மேன் ஷோ

அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக கடந்த 11ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து அஜித் - ஹெச் வினோத் - தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணி மூன்றாவது முறையாக இந்தப் படத்தில் இணைந்துள்ளது. ஆக்‌ஷன் ஜானரில் உருவாகியுள்ள துணிவு படத்தில் அஜித் ஒன்மேன் ஆர்மியாக மாஸ் காட்டியுள்ளார். இது அஜித் ரசிகர்களுக்கான படமாக அமைந்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

வங்கியில் நடக்கும் மியூச்சல் பண்ட் மோசடி, கிரெடிட் கார்டு ஏமாற்று வேலைகள் என சோஷியல் மெசேஜ்களை கொடுத்துள்ளார் ஹெச் வினோத். ஆனால் இதற்காக அஜித்துக்கு கொடுக்கப்பட்ட ஆக்‌ஷன் சீன்ஸ் சில இடங்களில் ஓவராக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால் அதையும் மீறி அஜித் ரசிகர்களுக்கு துணிவு திரைப்படம் பொங்கல் விருந்தாக அமைந்துள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தின் இரண்டு நாள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டாவது நாள் கலெக்‌ஷன்

இரண்டாவது நாள் கலெக்‌ஷன்

அஜித்தின் துணிவு திரைப்படத்தின் FDFS நள்ளிரவு 1 மணிக்கு திரையிடப்பட்டது. இந்நிலையில், இரண்டாவது நாளில் துணிவு திரைப்படம் உலகம் முழுவதும் 27 முதல் 32 கோடி வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் மொத்தமாக முத்ல் இரண்டு நாட்களில் 66 முதல் 71 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாம். இதனால் துணிவு படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

முதல் நாள் வசூல் ரிப்போர்ட்

முதல் நாள் வசூல் ரிப்போர்ட்

துணிவு திரைப்படத்துக்கு முதல் நாளிலும் நல்ல ஓபனிங் கிடைத்திருந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 18 முதல் 21 கோடி ரூபாய் வரை வசூலித்திருந்ததாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியா முழுவதும் 25 முதல் 30 கோடியும், உலகம் முழுவதும் 39 கோடி ரூபாய் வரை கலெக்‌ஷன் செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இரண்டே நாட்களில் உலகம் முழுவதும் 70 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ள துணிவு, இந்த வார இறுதிக்குள் 100 கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X