Don't Miss!
- News
தேர்தல் ஆணையம் ஜனநாயக கடமையில் தவறிவிட்டது.. எங்கள் நியாயத்தை முன்வைப்போம்.. வைகைச்செல்வன் பேட்டி!
- Automobiles
டாடா மாருதி ஆட்டம் எல்லாம் இனி குளோஸ்! க்விட் இவி வந்ததும் துண்டை காணும் துணிய காணும்னு ஓட போறாங்க!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Sports
ஹர்திக் கொடுத்த பலே ஐடியா.. சதத்திற்கு நீங்க தான் காரணம்.. ஹர்திக் குறித்து சுப்மன் கில் பேச்சு
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
Thunivu Box office worldwide: 150 கோடியை கடந்த துணிவு கலெக்ஷன்... அஜித்தின் தரமான சம்பவம்
சென்னை: அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் கடந்த வாரம் 11ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
அஜித் - ஹெச் வினோத் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்த இந்தத் திரைப்படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் வாரிசு படத்துக்கு எதிராக களமிறங்கிய துணிவு, பாக்ஸ் ஆபிஸிலும் புதிய சாதனை படைத்துள்ளது.
பொங்கல் விடுமுறையும் முடிவுக்கு வந்துவிட்டதால் துணிவு படத்தின் முதல் வாரம் பாக்ஸ் ஆபிஸ் தகவல்களை இப்போது பார்க்கலாம்.
துணிவு கொண்டாட்டத்தின் போது உயிரிழந்த அஜித் ரசிகர்.. நேரில் சென்று அஞ்சலி செலுத்திய சரத்குமார்

அஜித் - ஹெச் வினோத் காம்போ
அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் கடந்த வாரம் 11ம் தேதி வெளியானது. ஹெச் வினோத் இயக்கிய இந்தப் படம், வங்கிகளில் நடக்கும் பண மோசடியை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது. நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களில் சந்தித்த மோசமான விமர்சனங்களுக்கு அஜித் - வினோத் காம்போ, இந்தப் படத்தில் பதிலடி கொடுத்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ள அஜித் ஆக்ஷனில் ஒன்மேன் ஷோ காட்டியுள்ளார் என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பாக்ஸ் ஆபிஸ் அப்டேட்
அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அதேபோல், அஜித்தின் துணிவுக்கு போட்டியாக விஜய்யின் வாரிசு திரைப்படமும் கடந்த வாரம் 11ம் தேதி ரிலீஸானது. இரண்டு படங்களுக்கும் நல்ல ஓப்பனிங் கிடைத்த நிலையில், விஜய்யின் வாரிசு 5 நாட்களில் 150 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்தது. அடுத்த சில மணி நேரங்களிலேயே அஜித்தின் துணிவு 5 நாட்களில் 175 கோடி கலெக்ஷன் செய்துள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் அதனை படக்குழு இன்னும் உறுதி செய்யவில்லை.

150 கோடியை கடந்தது
ஆனால், பொங்கல் விடுமுறை தினங்களான 15, 16, 17 என கடந்த 3 நாட்களில் துணிவு படத்துக்கான டிக்கெட் புக்கிங் மீண்டும் விஸ்வரூபமெடுத்தது. அனைத்து காட்சிகளுமே ஹவுஸ்ஃபுல் ஆனதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் முதல் 7 நாட்கள் முடிவில் துணிவு 150 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஒரே வாரத்தில் துணிவுக்கு கிடைத்துள்ள இந்த வசூல், அஜித் ரசிகர்களுக்கும் படக்குழுவினருக்கும் பொங்கல் விருந்தாக அமைந்துள்ளது.

தமிழ்நாட்டில் 100 கோடி?
முதல் நாளில் இருந்தே துணிவு படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் தமிழ்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளில் 25 கோடி ரூபாயும், இரண்டாவது நாளில் 14 கோடியும் வசூலித்தது. அதற்கடுத்த நாட்களிலும் சீரான வசூலை வாரி குவித்த துணிவு, இதுவரை தமிழ்நாட்டில் 90 கோடியை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி துணிவு திரைப்படம் தமிழ்நாட்டில் 100 கோடி வசூலை எட்டவுள்ளது. சமீபத்தில் வெளியான அஜித்தின் படங்களில், துணிவு தான் வசூலில் சிறப்பான சம்பவம் செய்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.