Thunivu Box office worldwide: ரியல் பொங்கல் ஆரம்பம்... வசூலில் விஸ்வரூபமெடுத்த துணிவு
சென்னை: அஜித், மஞ்சு வாரியர், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள துணிவு கடந்த வாரம் 11ம் தேதி வெளியானது.
முதல் நாளில் நல்ல ஓப்பனிங் கிடைத்த துணிவு திரைப்படம், பொங்கல் விடுமுறையை முன்னிட்டு மீண்டும் வசூலில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
வசூலில் 100 கோடியை கடந்த துணிவு படத்தின் டிக்கெட் புக்கிங், மீண்டும் அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனால் இந்த வரமும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல கலெக்ஷன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் விஸ்வரூபம்
அஜித் ஹீரோவாக நடித்துள்ள துணிவு திரைப்படம் கடந்த வாரம் 11ம் தேதி வெளியானது. ஹெச் வினோத் இயக்கிய இந்தப் படம், வங்கியில் நடக்கும் மறைமுக பண மோசடியை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது. மங்காத்தாவுக்கு பிறகு அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளதால், துணிவு படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. அதன்படி முதல் நாளில் நல்ல ஓப்பனிங்கும் கிடைத்தது. இந்நிலையில் பொங்கல் விடுமுறை களைக்கட்டி வருவதால், டிக்கெட் புக்கிங்கில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது துணிவு.

பாக்ஸ் ஆபிஸ் வசூல்
அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் 22 முதல் 25 கோடி வரை வசூலித்த துணிவு, உலகம் முழுவதும் ரூ.40 கோடி கலெக்ஷன் செய்துள்ளதாக தகவல் வெளியானது. அதேநேரம் இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்ததால், அடுத்தடுத்த நாட்களில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.

100 கோடியை கடந்தது
அதன்படி அடுத்த மூன்று நாட்களும் துணிவு படத்தின் பாக்ஸ் ஆபிஸ் மிக இயல்பாகவே இருந்தது. இரண்டாவது நாளில் உலகம் முழுவதும் 20 முதல் 25 கோடி ரூபாய் வரையும், மூன்றாவது நாளில் மொத்தம் ரூ.15 முதல் 18 கோடியும் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், 4வது நாளில் மொத்தம் 17 முதல் 20 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக சொல்லப்பட்டது. அதன்படி முதல் நான்கு நாட்களில் 95 கோடி ரூபாய் வரை வசூலித்தது துணிவு.

இது பொங்கல் வசூல்
இந்நிலையில், பொங்கல் விடுமுறை தொடங்கியதால், துணிவு வசூல் நேற்று பிக்கப் ஆகியுள்ளது. ரியலான பாக்ஸ் ஆபிஸ் ரேஸ் நேற்று தான் தொடங்கியுள்ளதாக சினிமா ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். இதனால் இந்த வாரமும் துணிவ், வாரிசு திரைப்படங்கள் இடையே பாக்ஸ் ஆபிஸில் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் 5ம் நாளான நேற்று, 20 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது துணிவு. இதனால் மொத்தம் 112 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாகவும் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. துணிவு படத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்துள்ள வரவேற்பால் படக்குழுவினரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











