twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எதிர்பார்ப்புகளை குறைக்கத்தான் போராட வேண்டியிருக்கு.. ரசிகர்கள் ஈகோவை விளாசிய துணிவு பட இயக்குநர்!

    |

    சென்னை: அஜித்தின் துணிவு படத்தை இயக்கி உள்ள இயக்குநர் ஹெச். வினோத் பொறுப்புணர்வுடன் ஒரு படத்தை எப்படி எடுக்க வேண்டும் என்றும் இந்த மார்க்கெட் போட்டி மற்றும் ரசிகர்கள் ஈகோ ஒரு படத்தை என்ன செய்கிறது என்பது குறித்து விரிவாக பேட்டி அளித்து பல விஷயங்களுக்கு பதில் கொடுத்துள்ளது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

    தீரன் அதிகாரம் ஒன்று படம் போல இன்னொரு படமாக வலிமை மாறிவிடக் கூடாது என்பதற்காகவே அந்த படத்தில் என்கவுன்டர் காட்சிகளை தவிர்த்து இருந்தோம் என பேசிய ஹெச். வினோத் இப்போதெல்லாம் எதிர்பார்ப்புகளை குறைக்கத்தான் போராட வேண்டியிருக்கு என பளிச்சென பேசி ரசிகர்களின் சமூக வலைதள சண்டைகள் பற்றிய விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.

    ரசிகர்களின் ஈகோ கிளாஷ் தான் சமீப காலமாக பல படங்களை தோல்வி படங்களாக மாற்றுகின்றன என்றும் ஹெச். வினோத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

     லீக்கான சூர்யா 42 டைட்டில்... அஜித் ரூட்டில் சூர்யாவின் V சென்டிமெண்ட்... இது ஒர்க் அவுட் ஆகுமா? லீக்கான சூர்யா 42 டைட்டில்... அஜித் ரூட்டில் சூர்யாவின் V சென்டிமெண்ட்... இது ஒர்க் அவுட் ஆகுமா?

    ப்ரமோஷன் பெருகிடுச்சு

    ப்ரமோஷன் பெருகிடுச்சு

    முன்பெல்லாம் ஒரு தயாரிப்பாளர் தனது படத்தை மக்கள் இடையே கொண்டு செல்ல பெரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. பத்திரிகையில் தங்கள் படங்கள் குறித்து முன்னணி நடிகர்களே பேட்டி அளிப்பார்கள். ஆனால், இப்போதெல்லாம் சோஷியல் மீடியா பெருகி விட்ட காரணத்தால் அதற்கான தேவையே இல்லாமல் போய் விட்டது என்றார்.

    எதிர்பார்ப்புகளை குறைக்கணும்

    எதிர்பார்ப்புகளை குறைக்கணும்

    சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட ஆன்லைன் டிராக்கர்கள், சினிமா அனாலிஸ்ட் என பலரும் பெருக்கெடுத்து விட்டனர். அவர்களுக்கான தீனிக்காக ஏகப்பட்ட ஹைப்களை ஒவ்வொரு படத்தின் மீதும் திணிப்பதும் பின்னர் விமர்சன போட்டிக்காக படங்களில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டுகிறேன் என பல படங்களை ஓடவிடாமல் செய்வதுமாக மாறிவிட்டது. இப்போ ப்ரமோஷன் பண்ணுவதை விட எதிர்பார்ப்புகளை குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு சென்று விட்டோம் என்றார்.

    அதே அஜித் தான்

    அதே அஜித் தான்

    நான் அதே வினோத் தான் அவர் அஜித் சார் தான். புதிய புதிய டெக்னாலஜிகளுடன் எங்கள் சினிமா தொழிலை அடுத்து அடுத்து என்ன செய்ய முடியும் என்று செய்து வருகிறோம். ஆனால், ரசிகர்கள் இப்படித்தான் படம் இருக்க வேண்டும் என அவர்களாகவே ஏகப்பட்ட மனக் கணக்குகளை போட்டியின் காரணமாக போட்டுக் கொண்டு படம் வெளியான பின்னர் அவர்கள் மனத் திரையில் ஓடிய படம் திரையில் ஓடவில்லையே என அப்செட் ஆகி விடுகின்றனர்.

    ரசிகர்களின் ஈகோ

    ரசிகர்களின் ஈகோ

    ரசிகர்களிடம் உள்ள ஈகோ பிரச்சனை மற்றும் முன்னணி நடிகர்களை வைத்து மார்க்கெட்டில் நடக்கும் ஈகோ பிரச்சனை தான் பல நல்ல கதைகள் படமாக மாறவிடாமல் தடுக்க முக்கிய காரணமாகவே உள்ளது என பல கேள்விகளுக்கு பளிச்சென பதில் அளித்துள்ளார். துணிவு படம் முதல் பாதி ரசிகர்களுக்கான கொண்டாட்ட படமாகவும் இரண்டாம் பாதி மக்களுக்கு தேவையான கருத்துள்ள படமாகவும் குடும்பங்கள் ரசிக்கும் வகையில் இருக்கும் என்றும் பேசி உள்ளார். வரும் ஜனவரி 11ம் தேதி துணிவு திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Thunivu Director H Vinoth says nowadays we try to less the over hype and fans ego before the movie release. That is the main reason for many good films turned to be flopped one in this industry.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X