ராசாத்தி.. என் ஆசை ராசாத்தி.. அஜித் டான்ஸை ட்ரோல் செய்யும் விஜய் ரசிகர்கள்.. ஃபேன் மேடே பெட்டராம்!

சென்னை: துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான "சில்லா சில்லா" பாடல் வெளியாகும் முன்னே அந்த பாடல் சிவகார்த்திகேயனின் டான் படத்தின் "ஜலபுல ஜங்" பாடலின் காப்பி என ட்ரோல்கள் பறந்தன.

இந்நிலையில், "சில்லா சில்லா" பாடல் வெளியான நிலையில், விஜய் ரசிகர்கள் முன்னதாக வெளியான "சில்லா சில்லா" ஃபேன் மேட் நல்லா இருந்தது என்றும் அஜித்தின் நடனத்தையும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

விஜய் பாடல் வெளியான சமயத்தில் அஜித் ரசிகர்கள் வச்சு செய்த நிலையில், பதிலுக்கு தற்போது விஜய் ரசிகர்கள் பங்கமாக பழி வாங்கி வருகின்றனர்.

அஜித் ரசிகர்கள் ஹாப்பி

அஜித் ரசிகர்கள் ஹாப்பி

ஜிப்ரான் இசையில் அனிருத் குரலில் கல்யாண் மாஸ்டர் கொரியோகிராஃபியில் உருவாகி உள்ள அஜித்தின் துணிவு ஃபர்ஸ்ட் சிங்கிளான "சில்லா சில்லா" பாடலை பார்த்த அஜித் ரசிகர்கள் ரொம்பவே ஹாப்பி ஆகி உள்ளனர். இப்படியொரு பாடலை கொடுத்த ஜிப்ரானையும் பாடிய அனிருத்தையும் அவர்களது சோஷியல் மீடியா பக்கத்தில் அஜித் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

ட்ரோல் சண்டை ஸ்டார்ட்

ட்ரோல் சண்டை ஸ்டார்ட்

விஜய்யின் வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ரஞ்சிதமே பாடல் மொச்சக் கொட்ட பல்லழகி பாடலின் காப்பி என்றும் தீ தளபதி பாடல் அனிருத் பாடிய நானும் ரவுடி தான் படத்தில் இடம்பெற்ற "வரவா" பாடலின் காப்பி என்றும் அஜித் ரசிகர்கள் கலாய்த்த நிலையில், தற்போது வெளியாகி உள்ள துணிவு பாடலை பார்த்த விஜய் ரசிகர்கள் வித விதமாக ட்ரோல் மீம்களை போட்டு கலாய்த்து வருகின்றனர்.

ஃபேன் மேடே பெட்டர்

ஃபேன் மேடே பெட்டர்

துணிவு "சில்லா சில்லா" பாட்டு எப்படி இருந்துச்சு டா என்றும் இதோட ஃபேன் மேடே நல்லா இருந்துச்சு என காக்கா முட்டை படத்தின் மீமை போட்டு விஜய் ரசிகர்கள் வெறுப்பேற்றி வருகின்றனர்.

 ராசாத்தி என் ஆசை ராசாத்தி

ராசாத்தி என் ஆசை ராசாத்தி

ரஞ்சிதமே பாடலில் விஜய் ஆடும் நடனத்தை துணி துவைக்கும் விளம்பரமாக மாற்றி அஜித் ரசிகர்கள் ட்ரோல் செய்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சில்லா சில்லா பாடலில் அஜித் நடனமாடும் காட்சிகளையும் சாம் ஆண்டர்சனின் "ராசாத்தி என் ஆசை ராசாத்தி" நடனத்தையும் வைத்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

என்னவொரு ஜோடி

என்னவொரு ஜோடி

சில்லா சில்லா பாடலுக்கு அஜித் நடனம் ஆடும் போது அவர் அருகே ஒரு வயதான பெண்மணி நடனமாடும் ஸ்க்ரீன்ஷாட்டை எடுத்துப் போட்டு என்னவொரு ஜோடி என கலாய்த்து வருகின்றனர். மேலும், மஞ்சு வாரியர் எங்கடா என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சட்டைக் கூட காப்பி

சட்டைக் கூட காப்பி

வாரிசு படத்தில் கேமராவுடன் விஜய் போஸ் கொடுத்த காட்சியின் போது அவர் அணிந்திருந்த சிகப்பு மற்றும் கருப்பு கட்டம் போட்ட சட்டையை போலவே அஜித்தும் துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான சில்லா சில்லா பாடலுக்கு அணிந்துள்ளார் என விஜய் ரசிகர்கள் சட்டை கூட காப்பி என கலாய்த்து வருகின்றனர். நண்பர் அஜித் போல விஜய் கோட் மாட்டி வரும் போது, நண்பர் விஜய் போல டிரெஸ் போட்டுட்டு அஜித் ஆடக் கூடாதா என அஜித் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X