Don't Miss!
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சாமியே ஐயப்போ.. என்னவொரு சின்க்.. அஜித்தின் ‘காசேதான் கடவுளடா’ பாட்டு எப்படி டிரெண்டாகுது பாருங்க!
சென்னை: அஜித் நடிப்பில் உருவாகி உள்ள துணிவு படத்தின் செகண்ட் சிங்கிளான 'காசேதான் கடவுளடா' பாடல் வீடியோவை ஐயப்ப பாடல் உடன் இணைத்து ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சு வாரியர், அமீர், பாவனி மற்றும் சிபி உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ள துணிவு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.
வாரிசு படத்துடன் மோத உள்ள நிலையில், ப்ரமோஷன் பணிகளில் துணிவு படமும் தூள் கிளப்பி வருகிறது.
வாரிசு ஆடியோ ரிலீஸுக்குப் போட்டியாக கெத்து காட்டப் போகும் அஜித்... மெர்சலான விஜய் ரசிகர்கள்!

காசேதான் கடவுளடா
அஜித் நடிப்பில் உருவாகி உள்ள துணிவு படத்தின் செகண்ட் சிங்கிளான காசேதான் கடவுளடா 2 நாட்களுக்கு முன்னர் வெளியானது. சில்லா சில்லா பாடலை விட இந்த பாடல் வேறலெவலில் இருக்கும் என பாடலை எழுதி பாடிய வைசாக் தெரிவித்து இருந்தார். ஆனால், பாடல் வெளியான பின்னர் இதுக்கு சில்லா சில்லா பாடலே பரவாயில்லை என ரசிகர்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.

வியூஸ் கம்மி
விஜய்யின் வாரிசு பட பாடலான ரஞ்சிதமே 100 மில்லியன் வியூஸை கடந்துள்ளது. ஆனால், சில்லா சில்லா மற்றும் காசேதான் கடவுளடா இரண்டு பாடல்களும் வெளியாகி இதுவரை ரஞ்சிதமே முதல் நாள் வியூஸை கூட முந்த முடியவில்லை என விஜய் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். வெளியான 2 நாட்களுக்கும் சேர்த்து காசேதான் கடவுளடா வெறும் 8 மில்லியன் வியூஸ் தான் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசியல் விளம்பரம்
காந்திக்கும் ஸ்விஸ் வங்கியில் அக்கவுண்ட் இருக்கு என்றும் நாடே கடனில் கிடக்குது போன்ற வரிகள் பாடலில் இருந்த நிலையில், துணிவு பாடலில் அரசியல் சர்ச்சைகள் இடம்பெற்று விளம்பரத்தை தேட பார்த்தனர். ஆனால், அந்த பாட்டுக்கு யாருமே பிரச்சனையை கிளப்பவில்லை என ட்ரோல்கள் குவிந்தன.
|
சாமியே ஐயப்போ
இந்நிலையில், துணிவு பாடலை ரசிகர்கள் வேறலெவலில் டிரெண்ட் செய்து வருகின்றனர். சபரி மலைக்கு பக்தர்கள் மாலை போடும் சீசன் இது என்பதால், சாமியே ஐயப்போ பாடலுடன் அஜித்தின் கும்பிடு போடும் டான்ஸை மிக்ஸ் செய்து அப்படியே சிங்க் செய்து டிரெண்டாக்கி வருகின்றனர் ரசிகர்கள்.

இது நல்லா இருக்கே
ஒரிஜினல் பாடலை விட இந்த பாட்டு நல்லா இருக்கே என விஜய் ரசிகர்களும் அந்த பாடலை அதிகம் ஷேர் செய்து டிரெண்ட் செய்து வருகின்றனர். வியூஸ் போட்டி, டிரெண்டிங் போட்டியில் அஜித் பின்னடவை சந்தித்தாலும், துணிவு படத்தின் பாக்ஸ் ஆபிஸில் தட்டித் தூக்குவார் என அஜித் ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.