நீங்களா ஒண்ணு நினைச்சி தியேட்டருக்கு வராதீங்க.. திடீரென முன் ஜாமின் வாங்கும் துணிவு இயக்குநர்!

சென்னை: அஜித்தின் துணிவு படத்தை இயக்கி உள்ள இயக்குநர் ஹெச். வினோத் அளித்த சமீபத்திய பேட்டி ரசிகர்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.

துணிவு படம் குறித்து ஆளாளுக்கு ஒரு கதையை கற்பனையாக சொல்லி வருகின்றனர். அவர்கள் எதிர்பார்த்த கதை ஸ்க்ரீனில் வரவில்லை என்றால் ஏமாற்றம் அடைந்து விடுகிறார்கள்.

இப்படி இயக்குநர் ஹெச். வினோத் ஏன் திடீரென கடைசி நேரத்தில் கட்ஸ் இல்லாமல் பேசுகிறார் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

எதிர்பார்ப்புகளை தாண்டி

எதிர்பார்ப்புகளை தாண்டி

ஒரு படம் இப்படித்தான் இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கத் தான் செய்யும். ஆனால், அந்த எதிர்பார்ப்புகளையும் தாண்டி ரசிகர்களை தியேட்டரில் வாவ் சொல்ல வைக்கும் படங்கள் தான் இதுவரை பிளாக்பஸ்டர், இண்டஸ்ட்ரி அடித்துள்ளன. இந்த ஆண்டு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான வலிமை திரைப்படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத நிலையில், துணிவு படத்தின் மீது மேலும், ரசிகர்கள் எதிர்பார்ப்பை எகிற விட்டுள்ளனர்.

எல்லாமே இருக்கு

எல்லாமே இருக்கு

ராவாக துணிவு படம் இருக்கும் என சொல்லி விட்டால், எங்கே குடும்ப ஆடியன்ஸும் பெண்களும் தியேட்டருக்கு வர மாட்டார்கள் என கடைசி நேரத்தில் நினைத்தார்களா? என்னவோ தெரியவில்லை. திடீரென வெறும் ஹெயிஸ்ட் படமாக மட்டும் துணிவு இருக்காது என்றும் சென்டிமென்ட், காமெடி என அனைத்தும் கலந்த பேக்கேஜாக துணிவு இருக்கும் என்றுள்ளார்.

மெயின் பிக்சர்

மெயின் பிக்சர்

சமீபத்தில் வெளியான சில்லா சில்லா பாடலில் அஜித்தின் லுக்கை பார்த்தே ரசிகர்கள் ஃபயர் விட்டு வருகின்றனர். அதுவெறும் டிரைலர் தான் இன்னும் மெயின் பிக்சரான படத்தின் ப்ரமோ காட்சிகள் எல்லாம் வெளியானால் ரசிகர்கள் சந்தோஷத்தின் உச்சத்துக்கே சென்று விடுவார்கள் என இயக்குநர் ஹெச். வினோத் பேசியது அஜித் ரசிகர்களை ஹாப்பி ஆக்கி உள்ளது.

உங்க கற்பனை வேண்டாம்

உங்க கற்பனை வேண்டாம்

துணிவு படம் ஹெயிஸ்ட் படம் என்றும் த்ரில்லர் என்றும் ஏகப்பட்ட கதைகள் சோஷியல் மீடியாக்களில் வலம் வருகின்றன எனக் கூறிவிட்டு சிரித்த ஹெச். வினோத், அது தான் பிரச்சனையே.. உங்க இஷ்டத்துக்கு ஒரு கதையை கற்பனை பண்ணிட்டு தியேட்டருக்கு வராதீங்க.. அப்புறம் அந்த கதை இல்லைன்னா அப்செட் ஆகி நல்லா இல்லைன்னு சொல்லிடுவீங்க என பேசியிருப்பது ரசிகர்களை சற்றே அதிர்ச்சியடைய செய்துள்ளது.

ஈஸியா கடுப்பாகிடுவேன்

ஈஸியா கடுப்பாகிடுவேன்

சோஷியல் மீடியாவில் ஹெச். வினோத் ஏன் இல்லை என்கிற கேள்விக்கு.. நான் ஈஸியா கடுப்பாகிடுவேன்.. அதனால் தான் அதில் எல்லாம் கவனம் செலுத்த தேவையில்ல என ஒதுங்கி இருக்கிறேன். என்ன செய்தி தேவையோ அது எனக்கு தினமும் தெரிந்து விடும். அது போதும் என நினைக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

வாரிசு கிளாஷ்

வாரிசு கிளாஷ்

முன்பெல்லாம் பண்டிகை நாட்களுக்கு 3 முதல் 4 பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும். ஆனால், இப்போ 2 படம் வருவதற்கே ஏதோ பெரிய விஷயமாக பலரும் பேசுகின்றனர். ஆரோக்கியமான போட்டி நல்லது தான். இரண்டு படங்களும் வரும் பொங்கலுக்கு ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் என பேசி உள்ளார்.

 துணிவு கேங்

துணிவு கேங்

துணிவு படத்தில் மஞ்சு வாரியர் அஜித்தின் டீமில் உள்ளார். மொத்தம் 5 பேர் கொண்ட கேங் அது என ஹெச். வினோத் கூறியுள்ளார். ஏற்கனவே சில்லா சில்லா பாடலில் பிக் பாஸ் பிரபலங்களான அமீர், பாவனி மற்றும் சிபி இடம்பெற்றுள்ள நிலையில், இவர்கள் 5 பேர் கொண்ட கேங் தான் ஒரு வங்கியை கொள்ளையடிக்கப் போகிறதா? என்கிற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X