Don't Miss!
- News
2022ம் ஆண்டில் பதிவான அதிக அளவிலான மரண தண்டனை.. 20 ஆண்டுகளில் இல்லாத அளவு! ஷாக் ரிப்போர்ட்
- Sports
இதெல்லாம் ஒரு பிட்ச்-ஆ? பிசிசிஐ மீது பாய்ந்த ஹர்திக் பாண்ட்யா.. 2வது டி20 வெற்றி குறித்து அதிருப்தி
- Automobiles
டொயோட்டா காரை அப்படியே காப்பி அடித்து புதிய காரை உருவாக்கும் மாருதி! பெரிய குடும்பங்களுக்காக சூப்பர் முயற்சி!
- Lifestyle
Today Rasi Palan 30 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது...
- Finance
பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
அரசியல் சப்ஜெக்ட்ல தான் விஜய்யை இயக்குவேன்.. ஹெச் வினோத் வெளிப்படை!
சென்னை :விஜய் நடிப்பில் கடந்த 11ம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி சர்வதேச அளவில் வாரிசு படம் திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்தப் படம் கடந்த 7 நாட்களில் 210 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளதாக தயாரிப்பு தரப்பு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. தொடர்ந்து சர்வதேச அளவில் படத்திற்கான வரவேற்பு அதிகரித்து காணப்படுகிறது.
வாரிசு படம் 8 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்தின் துணிவு படத்துடன் மோதியது. இந்த இரு படங்களும் கடந்த 11ம் தேதி ஒரே நேரத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.
ஏகே
62
படத்தில்
அஜித்துக்கு
ஜோடியாகிறாரா
சாய்
பல்லவி?
என்ன
லிஸ்ட்
பெருசாகிட்டே
போகுது!

விஜய்யின் வாரிசு படம்
நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, ஷாம், பிரபு, சரத்குமார், ஜெயசுதா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 11ம் தேதி பொங்கல் கொண்டாட்டமாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது வாரிசு படம். இந்தப் படம் சர்வதேச அளவில் அதிகமான வசூலை குவித்து வருகிறது. கடந்த 7 நாட்களில் 210 கோடி ரூபாய் வசூலை இந்தப் படம் தாண்டியுள்ளதாக தயாரிப்பு தரப்பு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

துணிவுடன் மோதிய வாரிசு
குடும்ப சென்டிமெண்டை மையமாக கொண்டு வெளியான நிலையிலும், படத்தில் விஜய் படத்திற்கே உரிய காமெடி, ஆக்ஷன் உள்ளிட்டவற்றையும் தூக்கலாக கொடுத்துள்ளார் படத்தின் இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி. இந்தப் படம் நடிகர் அஜித்தின் துணிவு படத்துடன் ஒரே நேரத்தில் வெளியாகியுள்ளது.

3வது முறையாக கூட்டணி
இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் அதிகப்படியான வரவேற்பை கொடுத்துள்ளனர். அஜித்தின் துணிவு படம் பிரபல இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்தக் கூட்டணி நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களில் இணைந்த நிலையில், தற்போது மூன்றாவது முறையாக இணைந்து துணிவு படத்தை கொடுத்துள்ளது.

விஜய்யை இயக்க ஹெச் வினோத் விருப்பம்
இதனிடையே தற்போது ஹெச் வினோத் அளித்துள்ள பேட்டியில், தான் விஜய்யை வைத்து படமியக்கினால் அது கண்டிப்பாக அரசியல் சார்ந்த படமாகத்தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். தான் விஜய்க்கு முன்னதாக கூறிய கதைகளும் அரசியலை சார்ந்தே கூறப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

ஹெச் வினோத்தின் அடுத்த படம்
இயக்குநர் ஹெச் வினோத் அடுத்ததாக தனுஷை வைத்து படமியக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கமலுடனும் புதிய படத்தில் இணையவுள்ளதாகவும் கூறப்பட்டது. முன்னதாக விஜய் சேதுபதியுடன் ஹெச் வினோத் இணைந்து விஜய்யின் மாஸ்டர் பட தயாரிப்பாளரின் கீழ் படமியக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஹெச் வினோத்தின் ஆசை
இந்நிலையில் நடிகர் விஜய்யை இயக்கும் தன்னுடைய விருப்பத்தை ஹெச் வினோத் வெளிப்படுத்தியுள்ளார். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று என வித்தியாசமான கதைக்களங்களில் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் படங்களை இயக்கி அடுத்தடுத்து 3 அஜித் படங்களை இயக்கும் வாய்ப்பை பெற்ற ஹெச் வினோத், விஜய்யுடன் அதிலும் அரசியல் கதையில் இணைந்தால் அது கண்டிப்பாக ரசிகர்களுக்கு கொண்டாட்டமாகவே அமையும்