Don't Miss!
- News
''அப்பா அப்படியென்றால் மகன் இப்படி! மனசாட்சியே இல்லையா?'' அமைச்சரை சாடிய அன்புமணி ராமதாஸ்!
- Technology
90's கிட்ஸ்களின் கனவு கேட்ஜெட்.! இப்போது ஹை-டெக் டிசைனில்.! அலறவிட்ட Sony Walkman விலை.!
- Finance
மத்திய பட்ஜெட் 2023: வருமான வரி குறைப்பால் எவ்வளவு பணம் மிச்சம்..!
- Lifestyle
கேந்திர திரிகோண ராஜயோகத்தால் பிப்ரவரி 7 முதல் இந்த ராசிகளுக்கு தொழிலில் அமோக வெற்றி கிடைக்க போகுது..
- Automobiles
இதுகளோட வருகைக்குதான் ரொம்ப நாளா வெயிட் பண்றோம்! டூவீலர் லவ்வர்ஸ்க்கு இந்த மாசம் செம்ம தீனி காத்திட்டு இருக்கு
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
துணிவு அயோக்கியர்களின் ஆட்டம்.. ஹெச் வினோத் சொன்னத பாருங்க!
சென்னை : நடிகர் அஜித்தின் துணிவு படம் பொங்கலையொட்டி ரிலீசாகவுள்ளது. இதையொட்டிய போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்தப் படத்தின் சூட்டிங் ஐதராபாத், சென்னை, விசாகப்பட்டினம் மற்றும் பாங்காக்கில் நடைபெற்று முடிந்துள்ளது.
துணிவு படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள், ஸ்டில்ஸ் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
பொங்கல்
ரேஸில்
உக்கிரமான
வாரிசு,
துணிவு…
பஞ்சாயத்தை
கூட்டிய
விஜய்,
அஜித்
ரசிகர்கள்!

நடிகர் அஜித்தின் துணிவு
நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் துணிவு. இந்தப் படத்தை ஹெச் வினோத் இயக்க, போனி கபூர் தயாரித்துள்ளார். படத்தின் சூட்டிங் ஐதராபாத், சென்னை, விசாகப்பட்டினம் மற்றும் பாங்காக் போன்ற இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் சிறப்பான அளவில் பேங்க் மற்றும் மவுண்ட் ரோட் செட் போடப்பட்டு சூட்டிங் நடத்தப்பட்டது.

விஜய்யுடன் மோதும் துணிவு
இந்தப் படம் முன்னதாக தீபாவளியையொட்டி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்தின் சூட்டிங் தாமதம் உள்ளிட்ட காரணங்களால் படம் தற்போது பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ளது. விஜய்யின் வாரிசு படத்துடன் துணிவு படமும் மோதவுள்ள நிலையில், ரசிகர்கள் சூப்பர் கொண்டாட்டத்துடன் படத்தை வரவேற்க காத்திருக்கின்றனர்.

மஞ்சு வாரியர் ஜோடியில்லை
படம் பேங்க் கொள்ளையை மையமாக கொண்டு த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் அஜித் நடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் மஞ்சு வாரியர் நாயகியாக நடித்துள்ளார். படத்தில் அவர் அஜித்திற்கு ஜோடியில்லை என்றும் மஞ்சு வாரியர், அமீர், பாவ்னி, சிபி சந்திரன் உள்ளிட்டவர்கள் அஜித்தின் கூட்டணியில் இருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

துணிவு படம் மங்காத்தா 2 இல்லை
இந்தப்படத்தின் பல்வேறு விஷயங்களை தனது சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துக் கொண்டுள்ள ஹெச் வினோத், இந்தப் படத்தில் நெகட்டிவ் ஷேடில் அஜித் நடித்துள்ளதாக தான் கூறினால் மங்காத்தாவின் அடுத்த பாகமா என்று ரசிகர்கள் கேட்பதாக தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் அஜித்தை வேறு லெவலில் ரசிகர்கள் பார்க்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கெட்டவர்களின் ஆட்டம்தான் துணிவு
மேலும் துணிவு படம் கெட்டவர்களின் ஆட்டம் என்றும் ஹெச் வினோத் குறிப்பிட்டுள்ளார். வலிமை படம் கொடுத்த அனுபவங்களை கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் படம் குறித்த யூகங்களை ரசிகர்கள் கருத்தில் கொள்ள வேண்டாம் என்றும் படத்தின் ட்ரெயிலர் மற்றும் பாடல்கள் வெளியானவுடன் படம் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் மேலும் கூறியுள்ளார். இதனிடையே படத்தின் புதிய ஸ்டில்களும் தற்போது வெளியாகியுள்ளன.

நீண்ட நாட்களுக்கு பிறகு மோதும் அஜித் -விஜய் படங்கள்
நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித் மற்றும் விஜய்யின் படங்கள் மோதவுள்ளன. இந்தப் படங்களுக்கு அதிகமான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அஜித்தின் படம் த்ரில்லர் ஜானரிலும் விஜய்யின் படம் குடும்ப சென்டிமெண்டை மையமாக கொண்டும் உருவாகியுள்ள நிலையில், இந்தப் படங்கள் ரசிகர்களை எப்படி கவரும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.