Don't Miss!
- Finance
எப்போ வேணாலும் அறிவிக்கலாம்.. பாகிஸ்தான் நிலை ரொம்ப மோசம்..!
- News
அவிழும் "மர்மம்.!" 43,000 பழமையான மம்மி.. எகிப்து பிரமிடுகளில் புதைந்து கிடக்கும் ரகசியம்!
- Lifestyle
உங்க பிறந்த தேதி 6,15 மற்றும் 24 இதுல ஒன்னா? அப்ப உங்க எதிர்காலம் எப்படி இருக்கப்போகுது தெரியுமா?
- Automobiles
இது இருக்குற வரைக்கும் மாருதியை அசைக்க முடியாது! காசை கொடுத்துவிட்டு காருக்காக தவம் கிடக்கும் 4.05 லட்சம் பேர்
- Technology
iPhone 15 சீரீஸ்: மொத்தம் 4 மாடல்கள்.. அனைத்திலுமே "இந்த" அம்சம் இருக்கும்.. என்னது அது?
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Sports
என்ன தெரிகிறது அங்கு??.. போட்டியின் போது அம்பயர் எராஸ்மஸ் செய்த காரியம்.. இணையத்தில் சிரிப்பலை!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
இதுவரைக்கும் பார்க்காத அஜித்தை துணிவு படத்தில் பார்க்கலாம்.. சூப்பர் அப்டேட் சொன்ன போனிகபூர்!
சென்னை : நடிகர் அஜித், மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் துணிவு. இந்தப் படத்தில் 3வது முறையாக அஜித் -ஹெச் வினோத் மற்றும் போனிகபூர் கூட்டணி இணைந்துள்ளது.
துணிவு படம் பொங்கலையொட்டி ரிலீசாகவுள்ள நிலையில் நீண்ட வருடங்கள் கழித்து விஜய் -அஜித் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளன.
இதனிடையே அஜித்தின் அடுத்தடுத்த கெட்டப்புகள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
அஜித் என் நடிப்பை பார்க்க ஆவலா இருக்காரா? இது வதந்தி இல்லையே- எஸ்.ஜே.சூர்யா காமெடி!

நடிகர் அஜித்குமார்
நடிகர் அஜித்குமார் தொடர்ந்து தன்னுடைய ரசிகர்களுக்கு சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார். அஜித்திற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ள நிலையில், அவரது சமீபத்திய படங்களில் சமூக அக்கறையும் காணப்படுகின்றன. நேர்கொண்ட பார்வை, வலிமை என அடுத்தடுத்த சிறப்பான படங்களை கொடுத்தார். அஜித், இதில் வலிமை படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், அதை பூர்த்தி செய்ய தவறி கலவையான விமர்சனங்களையே பெற்றது.

அஜித்தின் துணிவு படம்
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து தற்போது துணிவு படத்தில் ஹெச் வினோத் மற்றும் போனிகபூருடன் 3வது முறையாக இணைந்துள்ளார் அஜித். இந்தப் படத்தில் அஜித் ஹீரோ -வில்லன் என இரண்டு கெட்டப்புகளில் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. முன்னதாக மங்காத்தா படத்தில் வில்லன் கேரக்டரில் அசத்தியிருந்த அஜித் தற்போது மீண்டும் வில்லன் அவதாரம் எடுத்துள்ளார்.

அடுத்தடுத்து இடங்களில் சூட்டிங்
இந்தப் படத்தின் ஒரு கெட்டப்பில் நீண்ட தாடி, காதில் கடுக்கன், கூலர்ஸ் சகிதம் அஜித்தை பார்க்க முடிந்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத், விசாகப்பட்டினம், பேங்காக் என அடுத்தடுத்து நடைபெற்றது. குறிப்பாக ஐதராபாத்தில் பிரம்மாண்டமான பேங்க் மற்றும் மவுண்ட் ரோடு செட் போடப்பட்டு சூட்டிங் நடத்தப்பட்டது. தற்போது படத்தின் சூட்டிங் நிறைவடைந்த நிலையில், படத்தின் டப்பிங் பணிகளும் நிறைவடையும் தருவாயில் உள்ளது.

அப்டேட்டிற்காக காத்திருக்கும் ரசிகர்கள்
முன்னதாக இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர்கள் வெளியான நிலையில் அஜித் ரசிகர்கள் கொண்டாடினர். இதனிடையே படத்தின் அடுத்த அப்டேட்டிற்காக அவர்கள் காத்திருக்கின்றனர். டிசம்பர் மாதம் துவங்கியுள்ள நிலையில், முதல் வாரத்திலேயே படத்தின் முதல் சிங்கிள் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வலிமை படத்தில் சிறப்பான பிரமோஷனை மேற்கொண்ட போனிகபூர், இந்தப் படத்திற்கும் அதையே பின்பற்றுவார் என்று எதிர்பார்க்கலாம்.

துணிவு குறித்து பேசிய போனிகபூர்
இதனிடையே படம் குறித்து தற்போது போனிகபூர் பேட்டியொன்றை அளித்துள்ளார். அதில் அஜித்குமாரை இதுவரை பார்க்காத கேரக்டரில் இந்தப் படத்தில் பார்க்கலாம் என்றும் அவரது சொந்த வாழ்க்கையின் சில தருணங்கள் இந்தப் படத்துடன் ஒத்து போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனிடையே இந்தப் படத்தின் ட்ரெயிலர் இந்த மாத இறுதியில் வெளியாகும் என்றும் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
AK63: அஜித்தை இயக்குகிறாரா அட்லி.. தெறிக்கும் ஹாஷ்டேக்.. அப்போ விஜய் படம் என்ன ஆச்சு பாஸ்?
-
ஹரிஷ் கல்யாண், இவானா, யோகிபாபு கூட்டணியில் Lets Get Married... தோனி படத்தின் இன்ட்ரோ டீசர் ரிலீஸ்
-
முரட்டுக்காளை ரயில் ஃபைட்டை மறக்க முடியாது.. ஜூடோ ரத்தினத்துக்கு அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த் பேட்டி