முற்றிலும் ஆதாரமற்ற பொய்யான செய்தி..வதந்தியால் கடுப்பான போனி கபூர் பரபரப்பு ட்விட்!
சென்னை : முற்றிலும் ஆதாரமற்ற பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம் என தயாரிப்பாளர் போனி கபூர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
லவ் டுடே படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கியது மட்டுமில்லாமல், ஹீரோவாகவும் இந்த படத்தில், அறிமுகமாகியுள்ளார்.
கதாநாயகியாக இவானா, ராதிகா சரத்குமார், சத்யராஜ், ரவீனா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

லவ் டுடே
இன்றைய இளம் தலைமுறையின் காதலை அப்பட்டமாக படம் புட்டு புட்டு வைத்துள்ளது லவ் டுடே. பிரதீப் ரங்கநாதனும், இவனாவும் காதலிக்கின்றனர். இவர்களின் காதல் விவகாரம் கதாநாயகியின் அப்பா சத்தியராஜூக்கு தெரிய வருகிறது. இதையடுத்து, இருவரின் போனையும் ஒரு நாள் மாறி மாறிவைத்திருக்க வேண்டும் என்று ஒரு சிறு நிபந்தனை விதிக்கிறார்.

அழகான கதை
இதையடுத்தே படத்தில் விறுவிறுப்பு கூடுகிறது. அத்தியாவசியமாகிவிட்ட செல்ஃபோன் தேவையே இல்லாத பல ரகசியங்களை வைத்திருக்கும் பெட்டியாக மாறி வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதை இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் அழகாக சொல்லி இருக்கிறார். நகைச்சுவை, காதல் சென்டிமெண்டுடன் கதை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது.

வசூலை வாரிக்குவித்தது
நவம்பர் 4ம் தேதி வெளியான வசூலை வாரிக்குவித்து 2022ம் ஆண்டின் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் இணைந்தது. லவ் டுடே திரைப்படம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியான நிலையில் தெலுங்கு ஆடியன்சையும் கவர்ந்தது. அங்கும் மக்கள் குடும்பம் குடும்பமாக சென்று படத்தை பார்த்தனர்.

முற்றிலும் ஆதாரமற்றவை
இந்நிலையில் லவ் டுடே திரைப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் இந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல்கள் பரவின. இதற்கு போனி கபூர் தனது டிவிட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ளார். அதில், லவ் டுடே படத்தின் இந்தி ரீமேக் உரிமத்தை நான் வாங்கவில்லை. இது தொடர்பாக வெளியான செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் பொய்யானவை என தெரிவித்துள்ளார் . தேவையில்லாத வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வாரிசு
தயாரிப்பாளர் போனி கபூர், எச் வினோத், அஜித் மூன்றாவது முறையாக துணிவு படத்தில் இணைந்துள்ளனர். இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 11ந் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் இருந்து சில்லா சில்லா, கேங்ஸ்டரா, காசேதான் கடவுளடா என மூன்று பாடல்கள் வெளியாகி ஹிட்டாகினி. மேலும், டிரைலர்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.


Click it and Unblock the Notifications