Don't Miss!
- News
"பாக். மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கா? ஆதாரம் காட்டுங்க".. பாஜகவை வம்புக்கிழுத்த திக்விஜய் சிங்
- Automobiles
கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்கும் ஹோண்டா! மாருதி கார்களை தட்டி உட்கார வைக்க அதிரடி திட்டம்!
- Finance
ரூ.10,000 டூ ரூ.3 கோடியான கதை.. 22 பென்னி பங்குகள் கொடுத்த ஜாக்பாட் சான்ஸ்.. இனி கிடைக்குமா?
- Lifestyle
உங்க முகம் பொலிவிழந்து கருப்பா இருக்கா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை நைட் டைம்-ல போடுங்க...
- Sports
கே.எல்.ராகுல் - ஆதியா ஷெட்டிக்கு கெட்டி மேளம்.. கோலகலமாக நடந்த திருமணம்.. வரவேற்பு எப்போது தெரியுமா?
- Technology
ரூ.6,999க்கு அறிமுகமான ஸ்மார்ட்போன்! 124 மணிநேர பேட்டரி ஆயுள்.. இது எப்படி இருக்கு?
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
Thunivu Box office worldwide: அசராத அஜித்... பாக்ஸ் ஆபிஸில் 100 கோடியை நெருங்கிய துணிவு
சென்னை: அஜித் நடிப்பில் ரசிகர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய துணிவு திரைப்படம் 11ம் தேதி வெளியானது.
அதே 11ம் தேதியில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் ரிலீஸானதால் பாக்ஸ் ஆபிஸில் பயங்கரமான போட்டி காணப்படுகிறது.
இரண்டு திரைப்படங்களுமே கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ள நிலையில், துணிவு பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன.
உலகம் முழுவதும் வெளியான துணிவு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடியை நெருங்கியதாக சொல்லப்படுகிறது.
'துணிவு' திரைப்படத்தை தமிழ் ரசிகர்களுடன் பார்க்க விரும்பும் நடிகை மஞ்சு வாரியர்

ஆக்ஷன் ட்ரீட் கொடுத்த துணிவு
அஜித் - ஹெச் வினோத் - போனி கபூர் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள துணிவு திரைப்படம் கடந்த 11ம் தேதி வெளியானது. வியாழன் ரிலீஸ் என்ற சென்டிமெண்ட்டில் இருந்து விலகி புதன்கிழமையே வெளியானது துணிவு. ஹெச் வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அஜித் டார்க் டெவில் என்ற நெகட்டிவ் ரோலில் ரசிகர்களுக்கு ஆக்ஷன் ட்ரீட் கொடுத்து அசத்தியுள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
மியூச்சல் பண்ட், கிரெடிக் கார்டு என வங்கிகளில் நடக்கும் மோசடிகளின் பின்னணி தான் இந்தப் படத்தின் ஒன்லைனாக உருவாகியுள்ளது. நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை கொடுத்த அஜித் - ஹெச் வினோத் கூட்டணி, துணிவில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை வீணடிக்கவில்லை என்றே சொல்லப்படுகிறது. அதனால் முதல் நாளில் இருந்த அதே ஓப்பனிங், தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும் கிடைத்து வருகிறது. முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் 22 முதல் 25 கோடி வரை வசூலித்த துணிவு, உலகம் முழுவதும் 35 முதல் 40 கோடி வரை கலெக்ஷன் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

100 கோடி கிளப்பில் துணிவு
அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளிலும் துணிவு படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் 12 முதல் 15 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. உலகம் முழுவதும் 20 முதல் 25 கோடி ரூபாய் வரை கலெக்ஷன் செய்ததாக கூறப்படுகிறது. அதேபோல், மூன்றாவது நாளில் தமிழ்நாட்டில் 9 முதல் 12 கோடி ரூபாயும், உலகம் முழுவதும் 15 முதல் 18 கோடியும் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அசராத அஜித்
விஜய்யின் வாரிசு திரைப்படத்துடன் அஜித்தின் துணிவு மோதுவதால் வசூலில் பாதிப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படியில்லாமல் நான்காவது நாளிலும் துணிவு வசூல் புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. அதன்படி 4வது நாளில் மொத்தம் 17 முதல் 20 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. மேலும் இதுவரை துணிவு படத்தின் மொத்த வசூல் 90 முதல் 95 கோடி ரூபாய் வரை இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இன்று முதல் பொங்கல் விடுமுறை என்பதால் இன்னும் கலெக்ஷன் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.