விஜயின் அடுத்த படம் என்ன? பிரபல ஒளிப்பதிவாளர் வெளியிட்ட முக்கிய தகவல்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: விஜயின் அடுத்தப்படம் குறித்த முக்கிய தகவல் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்பை தவிர மற்ற வேலைகள் எல்லாம் சிறப்பாக நடைபெறுகிறது.

அவற்றில் சில சுவாரசியமான தகவல்களை டாப் 5 பீட்ஸில் வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் விஜய் அஜித் உட்பட முன்னணி நடிகர்கள் குறித்த சுவாரசிய தகவல்கள் இடம்பெற்றுள்ன.
விஜயின் அடுத்தப்படத்தை சுதா கொங்கரா இயக்கவில்லை என கூறியிருக்கிறார் பிகே. அதேபோல் பொன்மகள் வந்தாள் படத்தை தொடர்ந்து அட்லி தயாரிக்கும் அந்தகாரம் படமும் OTT தளத்தில் ரிலீஸாக உள்ளது என கூறியிருக்கிறார்.
சூர்யாவின் அருவா படத்தில் நடித்தது குறித்து அறிவித்த ராஷி கண்ணா மற்றும் விஜயின் அடுத்தப்படம் துப்பாக்கி 2 தான் என கூறியிருக்கும் சந்தோஷ் சிவன் உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும் அஜித்தின் வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் சிரஞ்சுசீவி நடிக்க உள்ள தகவல்களும் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம்பெற்றுள்ளன.


Click it and Unblock the Notifications











