For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தீபாவளி ரிலீஸில் எனக்கு பிடிச்சது தளபதியோட துப்பாக்கி தான் - திவ்யதர்ஷினி

  |
  Anchor DD is back: மீண்டும் விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார்

  சென்னை: எனக்கு தீபாவளி படங்கள்னாலே அது தளபதி படம் தான். அப்படி தீபாவளிக்கு நான் ரொம்ப ரசித்துப் பார்த்த திரைப்படம்னா அது துப்பாக்கி தான் என்று கூறியுள்ளார் திவ்யதர்ஷினி. தளபதியோட மத்த படங்களும் பார்ப்பேன். ஆனா துப்பாக்கி தீபாவளிக்கு பார்த்தது மிகவும் ஸ்பெஷல் என்றார் டிடி.

  சின்னத் திரையின் டார்லிங் என்று அனைவராலும் கொண்டாடப்படுபவர் திவ்யதர்ஷினி. யாருனு கேக்காதீங்க டிடி தாங்க அது. டார்லிங்னு அழைக்கப்படுறாங்கன்னா எவ்வளவு ஸ்வீட்டானவங்களா இருக்கணும்.

  Thuppakki Film was very special for me-Dhivyadharshini

  டிடி தன்னோட சின்ன வயதில் இருந்தே மேடையில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர். அப்போது மிகவும் பிஸியாக இருந்த அவருடைய சகோதரி பிரியதர்ஷினி உடன் பல நிகழ்ச்சிக்கு சென்றிருக்கிறார்.

  டிடியோட இன்ஸ்பிரேஷன் அவருடைய சகோதரியின் நண்பர்கள் மற்றும் புகழ்பெற்ற தொகுப்பாளர்களான விஜய் ஆதிராஜ், உமா பத்மநாபன், விஜய் சாரதி, ஜேம்ஸ் வசந்தன், சாகுல் ஹமீது மற்றும் பலர். அவர்களுடன் நெருங்கி பழகுவதற்கான வாய்ப்பு கிடைத்ததால் அவர்கள் என்னுடைய மிகப் பெரிய இன்ஸ்பிரேஷன். அதைத் தவிர தான் சந்திக்கும் அனைவரிடத்திலும் ஏதாவது ஒரு விசித்திரமான விஷயம் இருந்தால் அவர்களிடம் இருந்து அதை கற்றுக்கொள்வாராம் டிடி.

  ரஜினியின் மிகத்தீவிர ரசிகையாம் டிடி. ஞாயிற்றுக்கிழமைகளில் ரஜினி படம் ஒளிபரப்பப்பட்டால் அதை தவறாமல் பார்ப்பாராம். தியேட்டர்ல போய் படம் பார்த்தது எல்லாம் கல்லூரி காலங்களில் தானாம். பெற்றோர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்னு சொல்றாங்க.

  Thuppakki Film was very special for me-Dhivyadharshini

  சில ஆண்டுகளாக தீபாவளி படங்கள்னாலே அது தளபதி படம் தான். அப்படி தீபாவளிக்கு அவங்க ரொம்ப ரசித்துப் பார்த்த திரைப்படம்னா அது துப்பாக்கி தானாம். தளபதியோட மத்த படங்களும் பார்ப்பேன். ஆனா துப்பாக்கி தீபாவளிக்கு பார்த்தது மிகவும் ஸ்பெஷல் என்றார்.

  டிடியின் ஸ்பெசாலிட்டி என்னன்னா, அவங்க யாரை இன்டெர்வியூ எடுக்குறாங்களோ, அவங்களோட மிகவும் ஃப்ரெண்ட்லியா பேசறது தான். அந்த செலிப்ரெட்டியும் நம்ம டிடி தானேன்னு ரொம்ப கேஸுவலா கம்ஃபோர்ட்டா பதில் சொல்ல ஆரம்பிச்சிருவாங்க. இது எல்லாராலும் எளிதா செய்ய முடியாது. முடியாததை முடித்து காட்டுபவர் டிடி.

  Thuppakki Film was very special for me-Dhivyadharshini

  அவங்க ரொம்ப சிறப்பாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருந்தாலும், மிகவும் ரசித்து பரவசத்துடன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி கமல் 50 நிகழ்ச்சி தான். அதை மிகவும் பூரிப்போடு டிடி தொகுத்து வழங்கியது பார்வையாளர்களை மட்டுமல்ல, பிரபலங்களையும் மிகவும் கவர்ந்தது. அது டிடிக்கும் மிகவும் மனதோடு நெருக்கமான ஒரு நிகழ்ச்சியாம்.

  ஒருவரை இன்டெர்வியூ எடுக்க வேண்டும் என்று ஆசைப்படுவது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானை என்கிறார் டிடி. ஆனால் பிரபல திரைப்பட இயக்குநர் மிஷ்கினை நேர்காணல் செய்தது சிறிது கடினமாக இருந்ததாக நகைச்சுவையுடன் கூறினார்.

  டிடி தனது வாழ்வில் ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களால் காதல் என்றால், சிறிது விலகியே இருக்கிறார். இருப்பினும் அவருக்கான ஒருவரை நிச்சயம் ஒரு நாள் சந்திப்பேன் என்றும் நம்புகிறார்.

  தெறி தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் ரவிதேஜா - எத்தனை விமர்சனம் வந்தாலும் அசராத அட்லி தெறி தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் ரவிதேஜா - எத்தனை விமர்சனம் வந்தாலும் அசராத அட்லி

  பாலிவுட் சூப்பர் ஸ்டார் ரித்திக் ரோஷன் மீது அவருக்கு ஒரு ஈர்ப்பு இருப்பதாக கூறினார். டிடி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது காபி வித் டிடி. ஏற்கனவே இந்த நிகழ்ச்சியினை சுச்சி, அனு இவர்கள் தொகுத்து வழங்கியிருந்தாலும் காபி வித் டிடி தான் மிகவும் பிரபலமாகி பேசப்பட்டதற்கு முக்கிய காரணம், டிடியின் வித்தியாசமான அஃப்ரோச் மற்றும் பிரபலங்களுடனான ஃபிரண்ட்லி சூழல் தான்.

  இன்றைக்கு இந்த டாக் பேக் என்ற ஒரு சிஸ்டம் உள்ளது. ஆனால், அன்றைக்கு அது போல் கிடையாது. அடுத்தடுத்து என்னென்ன கேட்க வேண்டும் என்று தெரிந்து கொண்ட பின்பு தான் மேடையில் ஏறுவேன் என்றார் டிடி.

  ஒரு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஷாருக் கான், இயக்குநர் ஷங்கர், விஜய், கமல், சூர்யா, ஏ.ஆர்.ரகுமான் என முக்கிய பிரபலங்களுடன் எடுத்துக்கொண்ட மதிப்புமிக்க செல்ஃபீ தான் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒரு தருணம் என்றார் டிடி.

  நளதமயந்தி, விசில் திரைப்படத்திற்கு பிறகு ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு பவர் பாண்டி திரைப்படத்தில் நடித்தது ஒரு இனிமையான தருணமாக இருந்தது. ஒரு 60 வயது பெற்றோர் இடையே மலரும் அந்த இளமை பருவத்து காதலை மிகவும் அழகாக வெளிப்படுத்திய திரைப்படம் அது. அதில் நானும் ஒரு பங்காக இருந்தேன் என்பதை நினைக்கும் போது பெருமையாக உள்ளது என்றார் டிடி.

  இப்படி தனது வாழ்க்கையின் பல இனிமையான மலரும் நினைவுகளை பகிர்ந்தார் சின்னத்திரையின் டார்லிங் டிடி. சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் இவருக்கு ரசிகர் கூட்டம் உள்ளனர். டிடிக்காகவே ஷோ பார்ப்பவர்களும் உண்டு. அவர்கள் எப்படி பேசிக்கொண்டே இருக்கிறார் என்பது பலருக்கும் ஆச்சரியம் ஆனால் அது தான் டிடி ஸ்பெஷல். குட் கோயிங் டிடி.

  English summary
  For me Diwali movies, it's a Thalapathi Movies. Dhivyadharshini said that the movie I enjoyed the most for Diwali was Thuppakki Movie. DD said that the Thuppakki was very special for Diwali.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X