மூன்று நாட்களில் ரூ 10 கோடியை தாண்டிய துப்பாக்கி வசூல்!

By Shankar

சென்னை: விஜயின் துப்பாக்கி படம் தீபாவளிப் படங்களில் போட்டியே இல்லாத நம்பர் ஒன் இடத்தைப் பிடித்திருக்கிறது. இந்தப் படம் வெளியான மூன்றே நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ 10 கோடிக்கும் அதிகமாக வசூலைக் குவித்துள்ளது.

தீபாவளி படங்கள்

தீபாவளி படங்கள்

இந்த தீபாவளிக்கு துப்பாக்கி, போடா போடி, அம்மாவின் கைப்பேசி, அஜந்தா, காசி குப்பம் உள்பட 5 படங்கள் வெளியாகின.

இந்த 50ல் முதல் மூன்று படங்களைத்தான் ரசிகர்கள் சினிமாவாகவே மதித்தார்கள். மற்ற இரு படங்களும் வெளியான சுவடே தெரியவில்லை.

வசூலைக் குவிக்கும் துப்பாக்கி

வசூலைக் குவிக்கும் துப்பாக்கி

விஜய் - காஜல் அகர்வால் நடிப்பில், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உலகமெங்கும் 1000 அரங்குகளுக்கும் மேல் வெளியான துப்பாக்கி படம், முதல் மூன்றே நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ 10 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

இந்த ஆண்டில் வெளியான படங்களைப் பொறுத்தவரை இதுவே அதிக ஆரம்ப வசூல் என்றால் மிகையல்ல.

சர்ச்சைகளைத் தாண்டி...

சர்ச்சைகளைத் தாண்டி...

முஸ்லிம்கள் சர்ச்சை, மன்னிப்பு படலம் என சில பிரச்சினைகள் இருந்தாலும் துப்பாக்கி வசூல் குறைவின்றி தொடர்கிறது.

இதற்குக் காரணம் ஏ ஆர் முருகதாஸின் விறுவிறு திரைக்கதை மற்றும் விஜய்யின் அலட்டல் இல்லாத நடிப்புதான் என்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள்.

போடா போடி

போடா போடி

கலவையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது சிம்பு - வரலட்சுமி நடிப்பில் வெளியாகியுள்ள போடா போடி. துப்பாக்கிக்கு அடுத்த இடம் இந்தப் படத்துக்கு கிடைத்திருக்கிறது. காரணம், அதற்குப் போட்டியாக நல்ல படம் எதுவும் வெளியாகாததே என்கிறார்கள் விமர்சகர்கள்.

அம்மாவின் கைப்பேசி

அம்மாவின் கைப்பேசி

தங்கர் பச்சானின் அம்மாவின் கைப்பேசிக்கு ரசிகர்கள் ஆதரவு கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட ஒரு சராசரி டிவி சீரியல் போல இந்தப் படத்தை எடுத்துள்ள தங்கர் பச்சான், படம் ஓடாததற்காக தன்னைத் தானே சுயவிமர்சனம் செய்து கொள்வதை விடுத்து, ரசிகர்களைக் குறை சொல்லிக் கொண்டிருப்பதை என்னவென்பது!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X