மணிரத்னம் பாராட்டிய விக்ரம் பிரபு பட டீசர்: ஒரு மில்லியனைக் கடந்து சாதனை

துப்பாக்கி முனை பட டீசர் ஒரு மில்லியனைக் கடந்துள்ளது.

சென்னை: விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை டீசர் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

விக்ரம் பிரபு அடுத்தடுத்து நல்ல நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ராதாமோகனின் 60 வயது மாநிறம் திரைப்படத்திற்குப் பிறகு வெளியாக இருக்கும் படம் துப்பாக்கி முனை.

Thuppakki Munai teaser!

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசரைப் பார்த்த இயக்குனர் மணிரத்னம் வெகுவாக பாராட்டினார். இப்போது ஒரு மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்து வருகிறது.

"நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல" என்ற படத்தை இயக்கிய தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்திருக்கும் படம்தான் துப்பாக்கி முனை. இப்படத்தில் விக்ரம் பிரபு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நடித்துள்ளார்.

"நான் சாப்பிடும் அரிசியில் என் பேரு இருக்குங்குறது உண்மைன்னா... என்னுடைய ஒவ்வொரு தோட்டாவிலும் குற்றவாலியோட ஜாதகமே இருக்குங்குறது என் நம்பிக்கை. ஆனா அந்த நம்பிக்கையை புரட்டி போட்ட ஒரு கேஸ்" என விக்ரம் பிரபு ஆரம்பிக்கும்போது படத்தில் பல விஷங்கள் இருக்கிறது என தெளிவாகிறது.

இந்த டீசரில் துப்பாகி தோட்டாக்கள் தெறிக்கும் சப்தம் அதிகமாக உள்ளது. இப்படத்தின் மூலம் ஹன்சிகா முதன்முறையாக விக்ரம் பிரபுவுடன் ஜோடி சேர்ந்துள்ளார். வேல ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இப்படத்திற்கு எல்.வி.முத்துகணேஷ் இசையமைத்துள்ளார். ராமசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X