விஜய்யின் 'கத்தி'யில் துப்பாக்கி சென்டிமென்ட்
சென்னை: கத்தி படத்தில் விஜய் பாடியுள்ள செல்ஃபி புள்ள பாடலை மும்பையில் ரூ.2.5 கோடி செலவில் போடப்பட்ட செட்டில் படமாக்குகிறார்களாம்.
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ள கத்தி படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளது. விஜய் தனது காட்சிகளை நடித்துக் கொடுத்துவிட்டார். படத்தில் அவர் பாடிய செல்ஃபி புள்ள பாடலை மட்டும் படமாக்க வேண்டும்.
இந்த பாடல் காட்சியை மும்பையில் படமாக்குகிறார்களாம்.

ரூ. 2.5 கோடி
செல்ஃபி புள்ள பாடலை படமாக்க மும்பையில் ரூ.2.5 கோடி செலவில் பிரமாண்ட செட் போட்டுள்ளனர். அங்கு தான் அந்த பாடலை படமாக்குகிறார்களாம்.

துப்பாக்கி
இதே முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி படத்தின் பெரும்பாலான காட்சிகள் மும்பையில் தான் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ராசி
துப்பாக்கி படத்தை மும்பையில் எடுத்ததாலோ என்னவோ அதே சென்டிமென்டுக்காக கத்தி படத்தின் பாடலை அங்கு படமாக்க உள்ளனர் என்று கூறப்படுகிறது.

பிரச்சனை
கத்தி படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரணால் தான் படத்திற்கு பிரச்சனை ஏற்பட்டது. இந்நிலையில் படத்தின் சேட்டிலைட் உரிமம் ஜெயா டி.வி.யின் கையில் இருப்பதால் படம் பிரச்சனை இன்றி ரிலீஸாகும் என்று படக்குழுவினர் நம்புகிறார்கள்.


Click it and Unblock the Notifications











