தயாரிப்பு.. நடிப்பு.. இயக்கம்.. எல்லாமே விஷால் தான்.. ஆனாலும் அந்த மிஷ்கின் டச் போகலையே ஏன்?

சென்னை: இயக்குநர் மிஷ்கின் போட்ட 15 அடாவடி கண்டிஷன்களுக்கு ஓகே சொல்ல முடியாத நிலையில், அவரை வெளியேற்றிவிட்டு, படத்தின் இயக்கத்தையும் நடிகர் விஷாலே கவனித்து வருகிறார்.

Recommended Video

Myskkin Vs Vishal | Thupparivalan 2 Controversy | Vishal Film factory

துப்பறிவாளன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது வெளியிட்டு வைரலாக்கி வருகிறார் விஷால்.

மிஷ்கின் மீது விஷால் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு, இதுவரை இயக்குநர் மிஷ்கின் தரப்பில் இருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை என்பது குற்றச்சாட்டை மேலும் உறுதிப்படுத்துகிறது.

பலியாடா ஆகாதீங்க

பலியாடா ஆகாதீங்க

தன்னை போல எந்தவொரு தயாரிப்பாளரும் இயக்குநர் மிஷ்கின் வலையில் சிக்கி பலியாடாக ஆகாதீங்க, என்பதை சொல்லாமல் சொல்லி சென்றுள்ளார் விஷால். மிஷ்கின் இயக்கத்தில் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட அடுத்த படத்தின் நிலையும் என்ன ஆகும் என்பது தெரியவில்லை. விஷால் குற்றச்சாட்டுக்கு மிஷ்கின் என்ன சொல்லப் போகிறார் என்பதையும் கோலிவுட் வட்டாரம் உற்று நோக்குகிறது.

பாலாவுக்கு பரவாயில்லை

பாலாவுக்கு பரவாயில்லை

வர்மா படத்தின் மொத்த ஷூட்டிங்கும் முடிந்தும் படம் ரெடியான பிறகு, அவரது இயக்கம் சரியில்லை என முதலில் இருந்து முற்றிலும் புதிய படமாக ஆதித்யா வர்மா படம் உருவானாலும், தயாரிப்பு தரப்பு, பாலா மீது மிகப்பெரிய பழி எதையும் போட்டு, மற்ற தயாரிப்பாளர்களை அலர்ட் செய்யவில்லை.

துப்பறிவாளன் 2 ஃபர்ஸ்ட் லுக்

துப்பறிவாளன் 2 ஃபர்ஸ்ட் லுக்

விஷால் பிலிம் ஃபேக்டரி தயாரிப்பில், விஷால் நடிப்பில் உருவாகி வரும் துப்பறிவாளன் 2 படத்தின் இயக்கத்தையும் நடிகர் விஷால் தற்போது கவனித்து வருகிறார். இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள விஷால், துப்பறிவாளன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தற்போது வெளியிட்டு வைரலாக்கி உள்ளார்.

கொண்டை மறையலயே

கொண்டை மறையலயே

இயக்குநர் மிஷ்கினை என்னதான் துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து வெளியேற்றி, நடிகர் விஷால் இயக்குநர் நாற்காலியில் அமர்ந்தாலும், மண்டை மேல இருக்கும் கொண்டை மட்டும் மறையலேயே எனும் போக்கிரி காமெடி போல, தொப்பி கொண்டு முகத்தை மறைத்தபடி மிஷ்கின் டச்சிலேயே நடிகர் விஷால் இந்த ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார் என கோலிவுட்டில் பேசிக் கொள்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X