ஜனவரியில் “துப்பறிவாளன் 2“ ஷூட்டிங் தொடக்கம்… விஷாலின் மாஸ் அப்டேட்!
சென்னை : துப்பறிவாளன் 2 திரைப்படம் ஜனவரியில் தொடங்கும் என்றும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யப்படும் என்று விஷால் கூறியுள்ளார்.
துப்பறிவாளன் 2 திரைப்படத்தில், அஷ்யா, ரகுமான், கெளதமி, பிரசன்னா உள்ளிட்ட பலர் விஷாலுடன் நடிக்கவுள்ளனர்.
நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வந்த இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

துப்பறிவாளன்
கடந்த 2017ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, வினய், ஆண்ட்ரியா நடிப்பில் வெளியான திரைப்படம் துப்பறிவாளன். இந்த படத்தில் ஒரு நேர்மையான டிடெக்டிவ் அதிகாரியாக விஷால் மற்றும் பிரசன்னா நடித்திருப்பார்கள். இந்த படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவற்பை பெற்றது.

துப்பறிவாளன் 2
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, துப்பறிவாளன் 2 விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்க லண்டனில் படப்பிடிப்பு தொடங்கியது. அதன் படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பியவுடன் மிஷ்கின் விஷால் இருவருக்கும் மோதல் வெடித்தது.

மிஷ்கின் விலகினார்
இதனைத் தொடர்ந்து இயக்குநர் பொறுப்பிலிருந்து மிஷ்கின் விலகினார். அதனால் விஷால் இயக்குநராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பொறுப்பேற்ற பிறகு துப்பறிவாளன் 2 படப்பிடிப்பு தொடங்கவில்லை. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டுமே வெளியிட்டார்கள்.
Recommended Video

எனிமி தீபாவளிக்கு
தீபாவளிக்கு விஷால் ஆர்யா நடிப்பில் த்ரில்லர் திரைப்படமாக எனிமி வெளியாகிறது. இந்த படத்தில் விஷால், ஆர்யா, மிருணாளினி, கருணாகரன் நடிக்கிறார்கள். இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்க, தயாரிப்பாளர் வினோத்குமார் தயாரித்துள்ளார்.

ஆர்யா எனிமி
விஷால் மற்றும் ஆர்யா முன்னதாக பாலா இயக்கத்தில் அவன் இவன் திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் இரண்டாவது முறையாக எனிமி படத்தின்மூலம் இணைந்துள்ளனர். இந்தப் படத்தில் விஷாலுக்கு எனிமியாகியுள்ளார் ஆர்யா.

ஜனவரியில் ஷூட்டிங்
இந்நிலையில், எனிமி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் விஷாலிடம் துப்பறிவாளன் 2 எப்போது? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த விஷால் ஜனவரியில் மீண்டும் ஷூட்டிங் போகிறோம். ஏப்ரலில் படம் வந்துவிடும். அக்டோபரில் எனது உண்மையான கனவுப்படத்தை துவங்கவுள்ளேன். அது எனது முதல் இயக்கமாக இருக்கும். துப்பறிவாளனை பொறுத்துவரை அது அநாதையாக விட்டுவிடக்கூடாது என தத்தெடுத்த குழந்தை. அதில், நிறைய நடந்தது என்றார்.


Click it and Unblock the Notifications











