துப்பறிவாளன் 2.. மீண்டும் விஷாலை இயக்கும் மிஷ்கின்.. அடுத்த மாதம் படப்பிடிப்பு துவக்கம்!
துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் லண்டனில் தொடங்குகிறது.
சென்னை: மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் லண்டனில் தொடங்குகிறது.
மிஷ்கின் நடிப்பில் விஷால் நடித்த துப்பறிவாளன் படம் கடந்த 2017ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்றது. இப்படத்தில் விஷாலுடன், பிரசன்னா, சிம்ரன், பாக்யராஜ், வினய், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. மிஷ்கின் இயக்கும் இப்படத்தின் விஷால் மீண்டும் துப்பறிவாளராக நடிக்கிறார். இந்த படத்திலும் பிரசன்னா அவருடன் இணைகிறார்.
மேலும், கவுதமி, ரஹ்மான் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இளையராஜா இசையமைக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் நிரஷ் ஷா இதற்கு ஒளிப்பதிவு செய்கிறார். விஷால் தான் படத்தை தயாரிக்கிறார்.
துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் பெரும் பகுதி லண்டனில் படமாக்கப்பட உள்ளது.
சுந்தர் .சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ஆக்ஷன் படத்தில் டிரெய்லர் நாளை வெளியாகிறது. படம் விரைவில் வெளியாகவுள்ளது. உதயநிதி நடிப்பில் மிஷ்கின் இயக்கியுள்ள சைக்கோ படத்தின் டீசர் நேற்று வெளியாகி டிரெண்டிங்காகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











