பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் விஜய்யின் 'மாஸ்டர்..' எப்போது தொடங்குகிறது டிக்கெட் புக்கிங்?

By

சென்னை: விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் டிக்கெட் புக்கிங் எப்போது தொடங்குகிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

Recommended Video

Bigg Boss Archana twitterல் வெளியேறினார் | Love -Hate வேண்டாம்

விஜய் நடித்துள்ள படம், மாஸ்டர். இதில், அவர் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார்.

விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார்.

கொரோனா தீவிரம்

கொரோனா தீவிரம்

இதில் விஜய், கல்லூரி பேராசிரியர் கேரக்டரில் நடித்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ள இந்தப் படம் கடந்த ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக இருந்தது. கொரோனா பரவல் தீவிரம் அடைந்ததால், லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக மாஸ்டர் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டது.

ஒரே நேரத்தில்

ஒரே நேரத்தில்

கொரோனா காலகட்டத்தைப் பயன்படுத்தி, இந்தப் படத்தை மற்ற மொழிகளிலும் வெளியிட முடிவு செய்யப்பட்டது. அதன்படி மற்ற மொழிக்கான டப்பிங் பணிகளை படக்குழு தொடங்கி முடித்துள்ளது. மாஸ்டர், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது

முதன்முறை

முதன்முறை

விஜய் நடிக்கும் படம் ஒன்று, ஒரே நேரத்தில் பல்வேறு மொழிகளில் வெளியாவது இதுதான் முதன்முறை. இந்த படத்தின் இந்தி மொழி மாற்றத்துக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வட இந்திய சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. படத்தின் டீசர் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ரசிகர்கள் டிரைலரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

பொங்கல் ரிலீஸ்

பொங்கல் ரிலீஸ்

இந்நிலையில் லாக்டவுனில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு சமீபத்தில் தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து, படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன. மாஸ்டர் படம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது. ஜனவரி 13 ஆம் தேதி வெளியாகும் என்று தெரிகிறது.

டிக்கெட் புக்கிங்

டிக்கெட் புக்கிங்


இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. சென்சாரில் இந்தப் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிக்கெட் புக்கிங், அடுத்த மாதம் 7 ஆம் தேதி தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X