டிக்கெட் டூ ஃபினாலே.. 5வது டாஸ்க்குல அவுட்டான ஆரி.. யாரு டாப்பர்னு பாருங்க மக்களே!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் கடந்த மூன்று நாட்களாக டிக்கெட் டூ ஃபினாலேவுக்கான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
இதில் இதுவரை 4 டாஸ்க்குகள் முடிந்துள்ள நிலையில் ரம்யா பாண்டியன்தான் 20 பாயிண்ட்ஸுடன் டாப்பில் உள்ளார்.

வளையத்தில் பந்து
இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது. இதில் டிக்கெட் டூ ஃபினாலேவுக்கான 5வது டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஹவுஸ்மேட்ஸுக்கு கொடுக்கப்படும் வளையத்தில் ஒரு பந்தை போட்டு சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

கீழே விழுந்து விட்டால்
வளையத்துக்குள் இருக்கும் பந்து நின்று விட்டாலோ அல்லது கீழே விழுந்து விட்டாலோ அந்த போட்டியாளர் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார். இதில் கடைசி வரை யாருடைய பந்து சுற்றிக் கொண்டே இருக்கிறதோ அவரே வெற்றியாளர் என அறிவிக்கப்படுகிறது.

கடும் போட்டி
இதில் ஆரி அவுட்டாகி விடுகிறார். இதோபோல் ரம்யா, ஷிவானி, கேபி மற்றும் சோம் ஆகியோரும் அவுட்டாகி விடுகின்றனர். இறுதி வரை ரியோவுக்கும் பாலாஜிக்கும் கடுமையான போட்டி நடக்கிறது.

காரசார விவாதம்
இதில் ரியோ முதல் இடத்தையும் பாலாஜி இரண்டாவது இடத்தையும் பிடிக்கின்றனர். இடையில் பாலாஜி, ஆரியிடம் புரோ டிஸ்ட்ராக்ட் பண்ணாதீங்க என்று கூறுகிறார். இதனால் இந்த டாஸ்க்கில் காரசாரமான விவாதம் இருக்கும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











