Tiger 3 Box Office: “பாக்ஸ் ஆபிஸில் சோலி முடிந்த டைகர் 3... ஐந்தாவது நாள் வசூல் இவ்வளவு தானா?

சென்னை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடித்த டைகர் 3 தீபாவளி ஸ்பெஷலாக வெளியானது.

யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பின் ஸ்பை த்ரில்லர் சீரிஸில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன.

Tiger 3 Box Office: Salman Khans Tiger 3 has collected 300 crores in 5 days

முதல் நாளில் மட்டுமே தரமான ஓபனிங் கிடைத்த டைகர் 3, அடுத்தடுத்த நாட்களில் மிக மோசமான நிலைக்குச் சென்றது.

இந்நிலையில், டைகர் 3 படத்தின் 5வது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

டைகர் 3 பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
பாலிவுட்டில் ஸ்பை த்ரில்லர் யூனிவர்ஸில் படங்களை தயாரித்து வருகிறது யாஷ் ராஜ் பிலிம்ஸ். இந்தாண்டு ஜனவரியில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான், யாஷ் ராஜ் பிலிம்ஸின் ஸ்பை த்ரில்லர் சீரிஸ் படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்த இந்தப் படம், ஆயிரம் கோடிக்கும் மேல் கலெக்‌ஷன் செய்தது.

இதனால், சல்மான் கானின் டைகர் 3 படத்துக்கும் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. இந்தப் படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்க மனீஷ் ஷர்மா இயக்கியிருந்தார். சல்மான் கானுடன் கத்ரீனா கைஃப், இம்ரான் ஹாஷ்மி ஆகியோர் நடித்திருந்தனர். ஷாருக்கான், ஹிருத்திக் ரோஷன் இருவரும் கேமியோ ரோலில் மிரட்டியிருந்தனர். இந்நிலையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டைகர் 3, கலவையான விமர்சனங்களை பெற்றது.

சல்மான் கானின் ஆக்‌ஷன் ட்ரீட்டைத் தவிர படத்தில் பெரிதாக எந்த மேஜிக்கும் இல்லை என ரசிகர்கள் விமர்சனம் செய்திருந்தனர். இதன் காரணமாக டைகர் 3 படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எதிர்பார்த்த அளவில் இல்லை என சொல்லப்படுகிறது. முதல் நாளில் மட்டுமே 95 கோடி ரூபாய் வசூலித்தது டைகர் 3. இரண்டாவது நாளில் 88 கோடியும், மூன்றாவது நாளில் 67 கோடியும் வசூலித்தது.

முதல் மூன்று நாட்களுக்குப் பின்னர் டைகர் 3 வசூல் மிகவும் மோசமாகியுள்ளதாக பாலிவுட் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி 4வது நாளில் 31 கோடி வசூல் செய்தது. இந்நிலையில் 5வது நாளிலும் டைகர் 3 திரைப்படம் 30 கோடி ரூபாய் மட்டுமே கலெக்‌ஷன் செய்துள்ளது. அதனடிப்படையில் முதல் 5 நாட்களில் 312 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது டைகர் 3.

முதல் வாரமே பாக்ஸ் ஆபிஸ் வசூலில் தடுமாறி வரும் டைகர் 3, அதிகபட்சமாக 500 கோடி வரை வசூலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷாருக்கானின் பதான், ஜவான் இந்த இரண்டு படங்களுமே ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X