Tiger 3: தியேட்டரில் பட்டாசு கொளுத்திய சல்மான் கான் ஃபேன்ஸ்... விஜய் ரசிகர்களுக்கு தக் லைஃப் மொமண்ட்
மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடித்துள்ள டைகர் 3 திரைப்படம் நேற்று ரிலீஸானது. தீபாவளி ஸ்பெஷலாக வெளியான டைகர் 3 படத்தை சல்மான் கான் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் மும்பையில் உள்ள திரையரங்கு ஒன்றில் சல்மான் கான் ரசிகர்கள் செய்த அட்ராசிட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் ரசிகர்கள் ரோகிணி தியேட்டரில் செய்த சம்பவம் எல்லாம் ஒன்றுமே இல்லை என்பதை சல்மான் கான் ஃபேன்ஸ் நிரூபித்துள்ளனர்.

தியேட்டர் உள்ளே தீபாவளி கொண்டாட்டம்
பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டைகர் 3 திரைப்படம், நேற்று ரிலீஸானது. தீபாவளி ஸ்பெஷலாக வெளியான இந்தப் படம், பாலிவுட் பாக்ஸ் ஆபிஸில் மரண மாஸ் காட்டி வருகிறது. அதன்படி, முதல் நாளில் உலகம் முழுவதும் 45 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது டைகர் 3.
மணீஷ் ஷர்மா இயக்கியுள்ள டைகர் 3, ஸ்பை த்ரில்லர் ஜானரில் ஆக்ஷன் ட்ரீட்டாக உருவாகியுள்ளது. சல்மான் கானுடன் கத்ரீனா கைஃப், இம்ரான் ஹாஷ்மி நடித்துள்ளனர். முக்கியமாக ஷாருக்கானும் ஹிருத்திக் ரோஷனும் கேமியோ ரோலில் நடித்துள்ளனர். ஷாருக்கானின் பதான் படத்தில் சல்மான் கான் கேமியோவாக நடித்திருந்தார். அதேபோல் இப்போது ஷாருக்கானும் சல்மான் கானுக்காக டைகர் 3ல் நடித்துக் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், டைகர் 3 படம் பார்க்கச் சென்ற சல்மான் கான் ரசிகர்கள், தியேட்டர் உள்ளே தீபாவளி கொண்டாடியது வைரலாகி வருகிறது. மும்பையில் உள்ள தியேட்டரில் டைகர் 3 படம் ஓடிக்கொண்டிருக்க, சல்மான் கான் என்ட்ரியாகும் சீனில் தியேட்டர் உள்ளேயே பட்டாசு கொளுத்திப் போட்டுள்ளனர் அவரது ரசிகர்கள். இதனால், தியேட்டரில் இருந்த மொத்த ரசிகர்களும் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இந்த வீடியோ டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதனைப் பார்த்த நெட்டிசன்களும் சல்மான் கான் ரசிகர்களை ட்ரோல் செய்து வருகின்றனர். மும்பையில் ஒரு ரோகிணி தியேட்டர் எனவும் கலாய்த்து வருகின்றனர். விஜய்யின் லியோ ட்ரெய்லரை ரோகிணி தியேட்டரில் ஸ்பெஷலாக வெளியிட்டனர். அப்போது விஜய் ரசிகர்கள் ரோகிணி தியேட்டரின் இருக்கைகள், ஸ்பீக்கர்கள் உட்பட 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை நாசம் செய்தனர்.
இப்போது அவர்களுக்கே டஃப் கொடுக்கும் விதமாக, சல்மான் கான் ரசிகர்கள் தரமான சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். தியேட்டர் முழுவதும் புஸ்வானம், ராக்கெட் போன்ற வெடிகளை கொளுத்தி சல்மான் கானுக்கே ஷாக் கொடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











