ஏமியை விடுங்க நாளைக்கு நைட் ஐபிஎல் நிகழ்ச்சியில் யார் ஆடுகிறார் தெரியுமா?
ராஜ்கோட்: ராஜ்கோட்டில் நடக்கும் ஐபிஎல் போட்டி துவங்கும் முன்பு நடக்கும் கலை நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் டைகர் ஷ்ராப் நடனமாடுகிறாராம்.
ஐபிஎல் 2017 திருவிழா புதன்கிழமை ஹைதராபாத்தில் கோலாகலமாக துவங்கியது. ஐபிஎல் துவக்க நிகழ்ச்சியில் நடிகை ஏமி ஜாக்சன் நடனமாடினார்.
அவர் நடனம் மகா மோசம் என நெட்டிசன்கள் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
ராஜ்கோட்
குஜராத் லயன்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதும் போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் நகரில் நாளை இரவு 8 மணிக்கு நடக்க உள்ளது.

டைகர் ஷ்ராப்
போட்டிக்கு முன்னதாக 7 மணி அளவில் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அதில் பாலிவுட் நடிகர் டைகர் ஷ்ராப் நடனமாடுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடனம்
ஏமி ஜாக்சன் நடனம் மோசம் என்று ரசிகர்கள் திட்டிக் கொண்டிருக்கும் நிலையில் நாளை டைகர் ஆட உள்ளார். ரப்பர் போன்று உடலை வளைத்து ஆடுவதற்கு பெயர் போனவர் டைகர் ஷ்ராப் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல்
இத்தனை ஆண்டுகளாக ஐபிஎல் போட்டி துவக்க விழா ஒரேயொரு முறை மட்டுமே நடந்தது. இந்த ஆண்டு போட்டி நடக்கும் 8 இடங்களிலும் துவக்க விழா நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











