ரொம்ப டூமச்.. என்னடா வேட்டை படத்தை வேற லெவலில் எடுத்து வச்சிருக்கீங்க.. பாகி 3 டிரைலர் ரிலீஸ்!

மும்பை: டைகர் ஷெராஃப் நடிப்பில் உருவாகி இருக்கும் பாகி 3 படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

லிங்குசாமி இயக்கத்தில் 2012ம் ஆண்டு வெளியான வேட்டை படத்தின் ரீமேக்காக உருவாகி உள்ள இந்த படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.

Tiger Shroff’s Baaghi 3 official trailer released!

பாகிஸ்தான் தீவிரவாதிகளை வார் படத்தில் துவம்சம் செய்த டைகர் ஷெராஃப் தற்போது சிரியாவுக்கு சென்று சண்டை செய்கிறார்.

மாதவன், ஆர்யா, அமலா பால், சமீரா ரெட்டி நடிப்பில் கடந்த 2012ம் ஆண்டு வெளியான வேட்டை படத்தில், எதற்கெடுத்தாலும் பயப்படும் போலீஸ் அண்ணனாக மாதவன் நடித்திருப்பார். அவருக்கு வரும் பிரச்சனைகளை தம்பி ஆர்யா துணையாக நின்று காப்பார்.

அதே கதையை மையமாக வைத்து தற்போது பாகி 3 படத்தை இயக்குநர் அஹ்மத் கான் இயக்கி உள்ளார்.

பாலிவுட் படம் என்பதால், இஷ்டத்துக்கு பட்ஜெட்டை அதிகரித்து, சிரியாவுக்கு போய் சண்டை செய்யும் ஹீரோவாக டைகர் ஷெராஃப் அதகளப்படுத்தியுள்ளார்.

லாஜிக் என்பது என்ன என்பதே தெரியாத அளவுக்கு பயங்கர மேஜிக்காக இந்த படத்தின் டிரைலர் இருக்கிறது.

பீரங்கி டாங்குகள், ஹெலிகாப்டர்கள் என எது வந்து தாக்கினாலும், அத்தனையும் அசால்ட்டாக அடித்து துவம்சம் செய்து விட்டு, எதிரிகளை புரட்டி எடுக்கும் சூப்பர் ஹீரோவாக டைகர் ஷெராஃப் நடித்துள்ளார்.

அண்ணன் கதாபாத்திரத்தில் ரித்தேஷ் தேஷ்முக் நடித்துள்ளார். அமலா பால் நடித்த கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார்.

பாகி படங்கள் எல்லாம் பழைய தமிழ் படங்களின் ரீமேக்காக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

பாகி 3 படத்தின் அதிரடியான ஓவர் ஆக்‌ஷன் டிரைலரை பார்த்து என்ஜாய் பண்ணுங்க.

வரும் மார்ச் 6ம் தேதி பாகி 3 திரைப்படம் திரைக்கு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X