Tiger Vs Pathaan: ஷாருக்கான் சல்மான் கான் கூட்டணியில் இப்படியொரு சம்பவமா..? பதறிய பாலிவுட்!

மும்பை: சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படம் 1050 கோடிக்கும் மேல் வசூலித்தது.

இந்தப் படத்தில் சல்மான் கான் டைகர் என்ற கேமியோ ரோலில் நடித்து மிரட்டியிருந்தார்.

பாலிவுட்டின் இருபெரும் தலைகளான ஷாருக்கானும் சல்மான் கானும் இதற்கு முன்பு இணைந்து நடித்துள்ளனர்.

ஆனால், நீண்ட இடைவேளைக்குப் பிறகு இருவரும் ஒரு பிரம்மாண்டமான படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tiger Vs Pathaan:
கடந்த இரண்டு வருடங்களாக பாய்காட் பிரச்சினையால் தடுமாறி வந்த பாலிவுட்டை, ஷாருக்கானின் பதான் திரைப்படம் மீட்டெடுத்தது. ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் நடிப்பில் வெளியான இந்தப் படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியிருந்தார். யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படம் அவர்களின் ஸ்பை திரில்லர் சீரிஸாக வெளியானது.

 Tiger Vs Pathaan: Siddharth Anand directs Shah Rukh Khan and Salman Khan

இந்தப் படத்தில் சல்மான் கானும் ஒரு கேமியோ ரோலில் நடித்து மாஸ் காட்டியிருந்தார். அதாவது சல்மான் கான் நடிப்பில் யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்த டைகர் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. பதான் படத்திலும் அதே டைகர் கேரக்டரில் சீக்ரெட் ஏஜெண்டாக வந்து ஷாருக்கானை காப்பாற்றுவார் சல்மான் கான். ஷாருக்கான் - சல்மான் கானை ஒன்றாக ஸ்க்ரீனில் பார்த்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். முக்கியமாக பதான் படத்தில் அவர்கள் இருவரும் பேசிக்கொள்ளும் வசனம் ரொம்பவே வைரலானது.

பதான் ஷாருக்கானும் டைகர் சல்மான் கானும் ஒன்றாக 15 நிமிடங்கள் நடித்ததற்கே ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்தனர். தற்போது அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க திட்டமிட்டுள்ளது யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ். அதன்படி, Tiger Vs Pathaan டைட்டிலில் ஷாருக்கான், சல்மான் கான் இணைந்து நடிக்கும் படத்தை தயாரிக்கவுள்ளது யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ். இந்தப் படத்தையும் சித்தார்த் ஆனந்த் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஷாருக்கானும் சல்மான் கானும் ஒரு படத்தில் சேர்ந்து நடிப்பது பாலிவுட்டையே பதற வைத்துள்ளது.

யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் 7வது ஸ்பை த்ரில்லர் படமாக இது உருவாகும் என சொல்லப்படுகிறது. அயன் முகர்ஜி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் 'வார் 2' திரைப்படம் உருவாகவுள்ளது. இன்னொரு பக்கம் ஷாருக், சல்மான் கான் கூட்டணியில் Tiger Vs Pathaan உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. மிகப் பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படம் குறித்து விரைவில் அபிஸியல் அப்டேட் வெளியாகவுள்ளதாம்.

 Tiger Vs Pathaan: Siddharth Anand directs Shah Rukh Khan and Salman Khan

ஷாருக்கான், சல்மான் கான் இருவரும் ஏராளமான படங்களில் இணைந்து நடித்துள்ளனர். ஆனால், சில வருடங்களுக்கு முன்னர் இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை என அறிவித்தனர். அதுமட்டும் இல்லாமல் இருவருக்கும் இடையே கொஞ்சம் ஈகோ பிரச்சினையும் தலை தூக்கியது. இருவரும் போட்டிப் போட்டு ஒருவரையொருவர் தாக்கி பேசி வந்த நிலையில் தான் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப் பொருட்கள் வழக்கில் போலீஸிடம் சிக்கினான். அப்போது உடனடியாக ஷாருக்கான் வீட்டிற்கு சென்றது சல்மான் கான் தான்.

இந்த சம்பவத்தில் இருந்து மீண்டும் நண்பர்களான ஷாருக்கான் சல்மான் கான், பதான் படத்தில் கெத்து காட்டினர். இந்த கெமிஸ்ட்ரி செம்மையாக ஒர்க் அவுட் ஆனதால், அடுத்ததாக மெகா ப்ராஜக்ட்டில் களமிறங்குகின்றனர். Bang Bang, War, Pathaan என அடுத்தடுத்து ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த சித்தார்த் ஆனந்த், இப்போது டைகர் VS பதான் படத்தையும் இயக்கவுள்ளதால், பாலிவுட் ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர். இந்தப் படத்தின் ஷூட்டிங் அடுத்தாண்டு தொடங்கி, 2025ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X