மொதல்ல போன கொடுங்க.. பார்கோட் இருந்தால் தான் உள்ளே அனுமதி.. நயன்தாரா திருமணத்தில் நடந்த அக்கப்போர்

சென்னை: மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் பார்க் ஹோட்டலில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் இனிதே நடந்து முடிந்துள்ளது.

Recommended Video

Nayanthara Wedding: மொதல்ல போன கொடுங்க.. பார்கோட் இருந்தால் தான் உள்ளே அனுமதி - வீடியோ

காலை 8 மணிக்கு ஆரம்பித்த திருமண நிகழ்ச்சி 10.30 மணிக்கு நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால், திருமண நிகழ்ச்சிக்கு வருகை தந்த பிரபலங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்கிற பெயரில் பவுன்சர்கள் செய்த அக்கப்போரால் ரொம்பவே சங்கடப்பட்டதாகவும் கூறுகின்றனர்.

லீக் ஆகக்கூடாது

லீக் ஆகக்கூடாது

நெட்பிளிக்ஸ் தளத்திற்கு திருமண நிகழ்ச்சியை வியாபாரம் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், திருமண நிகழ்ச்சியை யாரும் வீடியோ எடுக்கக் கூடாது என்றும் புகைப்படங்களுக்கும் அனுமதி கடுமையாக மறுக்கப்பட்டு இருக்கிறது. எந்தவொரு போட்டோவும் கடுமையான பாதுகாப்பு காரணமாக இதுவரை கசியவில்லை.

செல்போன் அனுமதி இல்லை

செல்போன் அனுமதி இல்லை

பெரிய சொகுசு காரில் வரும் பிரபலங்களை வரும் வழியிலேயே தடுத்து நிறுத்தி அவர்களது செல்போன்களை வாங்கிக் கொள்ளும் பவுன்சர்களின் காட்சி தற்போது வெளியாகி இருக்கிறது. தமிழ்நாட்டில் இதுவரை நடந்த எந்தவொரு பிரம்மாண்டமான திருமணத்திலும் இதுபோன்ற நடைமுறை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட் ஸ்டைலில் இதுபோன்ற செக்யூரிட்டியை போட்டுள்ளனர்.

80 பவுன்சர்கள்

80 பவுன்சர்கள்

திருமண விழா நடக்கும் இடத்தை சுற்றி 80 பவுன்சர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ரசிகர்கள் மற்றும் மீடியா ஆட்கள் யாரும் உள்ளே நுழைந்து விடக் கூடாது என்பதில் கடுமையான தீவிரம் காட்டி உள்ளதாகவும் சில லேடி பவுன்சர்கள் நிகழ்ச்சிக்கு வருகை தந்த விருந்தினர்களிடம் கடுமையான சோதனைகளை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

சங்கடத்தில் பிரபலங்கள்

சங்கடத்தில் பிரபலங்கள்

இதுவரை எந்தவொரு திருமணத்துக்கு சென்றாலும் இப்படியொரு கட்டுப்பாடு இல்லாத நிலையில் தங்களின் பர்சனல் செல்போன்களையே இப்படி வழிமறித்து தடுத்து நிறுத்தி வாங்கி விடுகிறார்களே என்றும் போன கொடுத்தால் தான் உள்ளே அனுமதி என்றும், பார்கோடு வேலை செய்யவில்லை என்றால் அனுமதி கிடையாது என்றும் கறார் காட்டி வரும் நிலையில், பிரபலங்கள் சிலருக்கு தர்ம சங்கடமான நிலை ஏற்பட்டதாக கூறுகின்றனர்.

அலப்பறை

அலப்பறை

பணிவாகவும் அன்பாகவும் பிரபலங்களிடம் ஒழுங்கான முறையில் சோதனை நடத்தாமல் பல பவுன்சர்கள் மற்றும் சோதனையில் ஈடுபடுவர்கள் நடந்து கொள்ளவில்லை என்றும் குற்றச்சாட்டுக்கள் கிளம்பி உள்ளன. பிரபலங்களிடம் இருந்து செல்போன்களை எப்படி செக்யூரிட்டி செக் செய்பவர்கள் வாங்குகின்றனர் என்பது குறித்த வீடியோக்களும் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X