இதே வேலையாவா இருப்பாங்க... மிடியல... எடிட்டிங் ரூமுக்கு செக்யூரிட்டியை அதிகரித்த இயக்குனர் ராஜமவுலி

By

ஐதராபாத்: ஆர்ஆர்ஆர் படத்தின் காட்சிகள் இனியும் லீக் ஆவதைத் தடுக்க எடிட்டிங் ரூமுக்கு இயக்குனர் ராஜமவுலி செக்யூரிட்டியை அதிகரித்துள்ளார்.

ராஜமவுலி இப்போது இயக்கி வரும் படத்துக்கு ஆர்.ஆர்.ஆர் என்று தற்காலிகமாக டைட்டில் வைத்துள்ளனர். இதில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா இணைந்து நடிக்கின்றனர்.

சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரி சித்ராமஜூ, கொமரம் பீம் ஆகியோர் வாழ்க்கைக் கதையை கொண்ட படம் இது. ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார்.

ஹாலிவுட் நடிகை

ஹாலிவுட் நடிகை

பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ஆலியா பட் உட்பட பலர் நடிக்கின்றனர். இதில் ஜூனியர் என்.டி.ஆர் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்த பிரிட்டீஸ் நடிகை, டெய்சி எட்கர் ஜோன்ஸ் திடீரென விலகினார். அவருக்குப் பதிலாக, ஹாலிவுட் நடிகை ஒலிவியா மோரிஸ் ஒப்பந்தமாகி உள்ளார்.

ரேய் ஸ்டீவன்சன்

ரேய் ஸ்டீவன்சன்

மேலும் தோர், கிங் ஆர்தர் உட்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள ரேய் ஸ்டீவன்சன், ஜேம்ஸ்பாண்ட் படமான எ வியூ டு கில், இண்டியானா ஜோன்ஸ், த லாஸ்ட் குருசேட் உட்பட பல படங்களில் நடித்துள்ள ஐரிஸ் நடிகை அலிசான் டூடி ஆகியோரும் நடிக்கின்றனர்.

ஜூனியர் என்.டி.ஆர்

ஜூனியர் என்.டி.ஆர்

பலத்த பாதுகாப்புடன் இதன் ஷூட்டிங் நடந்துவருகிறது. இருந்தும் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் காட்சியை ரசிகர் ஒருவர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். லீக் ஆன அவரது லுக், வைரலானது. இதையடுத்து என்டிஆரின் ஓபனிங் காட்சியும் வாட்ஸப்பில் லீக்கானது.

ராஜமவுலி கோபம்

ராஜமவுலி கோபம்

புலியுடன் அவர் போடும் சண்டைக்காட்சியை ஹைலைட்டான விஷயமாக படக்குழு வைத்திருந்தது. அது லீக் ஆனதில் இயக்குனர் ராஜமவுலி கோபமடைந்தார். பலத்த பாதுகாப்பு போட்டும் எப்படி இது லீக் ஆனது என்று ஆதங்கப்பட்டார். இதையடுத்து இப்போது எடிட்டிங் ரூமுக்கும் அவர் பாதுகாப்பை அதிகரித்துள்ளார். ராஜமவுலி படங்களின் காட்சிகள் லீக் ஆவது இது முதன்முறை இல்லை. ஏற்கனவே அவர் இயக்கிய நான் ஈ, பாகுபலி பட காட்சிகளும் லீக் ஆகி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X