twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நான் கடப்பாரை.. நீ குண்டூசி.. பவருக்கே "பன்ச்" கொடுத்த திகார் திகில் பார்ட்டிகள்!!

    |

    சென்னை: பேரரசு இயக்கத்தில் பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘திகார்' பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பவர் ஸ்டார் சீனிவாசன், விழா மேடையில் தனது திகார் சிறைவாச அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

    திருப்பாச்சி, சிவகாசி உள்ளிட்ட வெற்றிப் படங்களைத் தந்த இயக்குநர் பேரரசுவின் புதிய படம் திகார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த புதன் அன்று சென்னையில் நடைபெற்றது.

    படத்தின் இசையை கிரண்பேடி வெளியிட, வ.உ.சி.யின் பேரன் சிதம்பரம் பெற்றுக் கொண்டார். இவ்விழாவில் ரமேஷ் கண்ணா, எம்.எஸ்.பாஸ்கர், 'பவர் ஸ்டார்' சீனிவாசன் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் பங்கேற்றார்கள்.

    விழா மேடையில் பவர் ஸ்டாரை பேச அழைத்த பேரரசு, ‘இங்கு வந்துள்ளவர்களில், ஒருவருக்கு மட்டுமே திகாரைப் பற்றி தெரியும். பெயரிலே பவரை வைத்திருக்கும் பவர் ஸ்டாரை அழைக்கிறேன்" என்றார்.

    இதைக் கேட்டு தனது டிரேட் மார்க் புன்னகையோடு தனது பேச்சைத் தொடங்கினார் பவர் ஸ்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    என்னது திகாரா...?

    என்னது திகாரா...?

    பேரரசு போன் செய்து இசை வெளியீட்டு விழாவிற்கு வரணும்னு கேட்டார். நான் என்ன படம் என்று கேட்டேன். 'திகார்' என்றார். என்னது திகாரா? மறுபடியும் டெல்லி போலீஸ் வந்திருச்சோ என்று பார்த்தேன்.

    கொடுத்து வைத்தவன்...

    கொடுத்து வைத்தவன்...

    உண்மையில் நான் ரொம்ப கொடுத்துவைத்தவன் என்று நினைக்கிறேன். நிறைய இயக்குநர்களின் இயக்கத்தில் நடித்துவிட்டேன். தம்பி பேரரசு இயக்கத்தில் நடித்தபோதும் சந்தோஷமாக இருந்தது.

    நன்றி...

    நன்றி...

    ரொம்ப அலட்டிக் கொள்ளாமல் சொல்லுவார், நானும் அலட்டிக் கொள்ளாமல் நடித்துவிட்டேன். 2, 3 நாள் நடித்தது சந்தோஷமாக இருக்கிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அழைத்ததிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதையும் பார்ப்போம்...

    இதையும் பார்ப்போம்...

    நான் இந்த நிகழ்ச்சிக்கு வரணுமா, வேண்டமா என்று யோசித்தேன். வந்தால் கிண்டல் செய்வார்களோ என்று பயந்தேன். போவோம், எல்லாத்தையும் பார்த்துவிட்டோம்... இதையும் பார்ப்போம் என்று வந்திருக்கிறேன்.

    அதெல்லாம் சும்மா...

    அதெல்லாம் சும்மா...

    ரமேஷ் கண்ணா, வெங்கடேஷ் இருவரும் டெல்லி என்றாலே பரபரப்பாக இருக்கும் என்று கூறினார்கள். அதெல்லாம் ஒண்ணுமே கிடையாதுங்க.

    முன்னாடியே சொல்லக் கூடாதா...?

    முன்னாடியே சொல்லக் கூடாதா...?

    திடீரென்று இரவு 12 மணிக்கு தமிழ்நாட்டில் இருந்து "சார்.. உங்களை டெல்லிக்கு கூட்டிட்டு போறோம்" என்றார்கள். எதுக்கு என்று கேட்டேன். விசாரணை என்றவுடன் முன்னாடியே சொல்லக்கூடாதா கொஞ்சம் பணம் ஏதாவது எடுத்துட்டு வருவேன்ல என்றேன்.

    வருவது வரட்டும்...

    வருவது வரட்டும்...

    டெல்லி, கூட்டிட்டு போய் தூக்கு போட்டுருவாங்களோ என்று யோசித்தேன். என்ன தான் வருது என்று பார்த்துவிடுவோம் என்று கிளம்பினேன்.

    சென்னை வேண்டாம்...

    சென்னை வேண்டாம்...

    வேலூரில் இருந்தே ஏற்றினார்கள். என்னங்க சென்னைக்கு போகலயா என்று கேட்டேன். இல்லை சென்னைக்கு சென்றால், உங்களது ரசிகர்கள் உங்களை பிடித்துவிடுவார்கள் என்றார்கள். சரி பரவாயில்லை என்றேன்.

    ஏமாற்றி விட்டார்கள்...

    ஏமாற்றி விட்டார்கள்...

    அதிகாலை 2 மணிக்கு எழுப்பி, 3 மணிக்கு குளித்து கிளம்பி கூட்டிட்டு போனார்கள். என்னை நம்பிக்கை துரோகம் செய்தார்கள். வேண்டுமென்றே நான் செய்யவில்லை. என் உடன் இருந்தவர்கள் என்னை ஏமாற்றி விட்டார்கள்.

    உண்மை ஜெயிக்கும்...

    உண்மை ஜெயிக்கும்...

    கோடிக்கணக்கான பணங்களை இழந்து, நான் இந்த இடத்தில் நிற்கிறேன் என்றால், அது கடவுள் கொடுத்த வரம் என்று தான் சொல்லுவேன். உண்மை என்றும் ஜெயிக்கும் என்பார்கள். அதனால் தான் உங்கள் முன் நிற்கிறேன்.

    நல்ல ஜெயில்...

    நல்ல ஜெயில்...

    உண்மையில் சொல்கிறேன், திகார் ஜெயில் ரொம்ப நல்ல ஜெயில். இரவு 8 மணிக்கு கொண்டுப் போய் விட்டார்கள். மொழி தெரியாது, புது இடம் என்று பயந்தேன்.

    ஷூட்டிங்கா...?

    ஷூட்டிங்கா...?

    என்னை பார்த்தவுடன், "என்ன பவர்.. இங்க வந்துட்ட. ஷுட்டிங்கா " என்றார்கள். ஆமா என்று பொய் சொல்லக்கூடாது ஏனென்றால் ரொம்ப நாள் இருக்கப் போகிறோம் என்று எனக்குத் தெரியும். குறைந்தது 20 நாளாவது இருக்கணும், அப்படின்னா தான் பெயில் கிடைக்கும்.

    இத வச்சு ஒரு படம்...

    இத வச்சு ஒரு படம்...

    அதனால, ஷுட்டிங் எல்லாம் இல்லை. அப்படியே வந்தேன் என்று கூறினேன். பரவாயில்லை பவர். அதனால ஒண்ணுமில்லை. இதப் பார்த்து நீங்க படம் எடுக்கணும் என்றார்கள்.

    ரேப் பண்ணாமல் விட்டார்களே...

    ரேப் பண்ணாமல் விட்டார்களே...

    கண்டிப்பாக எடுக்கிறேன் என்று தெரிவித்தவுடன், உங்களுடன் இரவு படுத்திருந்தார்கள் அல்லவா யாரென்று தெரியுமா என்று கேட்டார்கள். தெரியாது என்றேன். ரேப் கேஸில் வந்தவர்கள் என்றவுடன், நம்மளை ரேப் பண்ணாமல் விட்டார்களே சாமி என்று எண்ணினேன்.

    அருமையான நண்பர்...

    அருமையான நண்பர்...

    அங்கு எனக்கு ஒரு அருமையான நண்பர் கிடைத்தார். என்ன பவர் இங்கு இருக்கீங்க என்று அவருடைய இடத்திற்கு அழைத்துச் சென்றார். அடுத்த நாள் இன்னொரு இடத்திற்கு கூட்டிட்டு போனார்.

    நான் கடப்பாரை... நீ குண்டூசி

    நான் கடப்பாரை... நீ குண்டூசி

    அங்கு இருந்தது எல்லாம் பெரிய பெரிய முதலைகள், போனவுடன் என்ன பண்ணிட்டு வந்தீங்க என்று கேட்டார்கள். சின்ன மேட்டர் தான் என்றவுடன், நான் எவ்வளவு தெரியுமா 2000 கோடி என்றார்கள். நான் கடப்பாரை நீ குண்டூசி என்றார்கள்.

    திகார் அனுபவங்கள்...

    திகார் அனுபவங்கள்...

    ஒவ்வொரு இடத்திற்கு சொல்லும் போது, வெவ்வேறு அனுபவங்கள் கிடைக்கிறது. திகார் அனுபவங்கள் எல்லாம் வேண்டாம், ஆனால் நான் பார்த்துவிட்டேன். திகார் பார்த்தவுடன் நிறைய விஷயங்கள் இருக்குமோ என்று பார்த்தால், ஒண்ணுமே இல்லை. ஆனால் இந்த 'திகார்' படத்தில் நிறைய விஷயங்கள் இருக்கிறது.

    இனி, சினிமா தான்...

    இனி, சினிமா தான்...

    இந்தியாவில் எங்கு சென்றாலும் இனிமே சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இனிமேல் எங்கேயும் போக மாட்டேன், திரையுலகில் தான் நிரந்தரமாக இருப்பேன். என்னுடன் இருந்த நண்பர்கள், உள்ளிட்ட அனைவரையும் துரத்திவிட்டேன்.

    தண்ணீர் கூட கொடுக்கவில்லை...

    தண்ணீர் கூட கொடுக்கவில்லை...

    என்னுடைய ரசிகர்கள் தான் என்னை இந்தளவிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். என்னுடைய ரசிகன் ஒருவன், "தலைவா.. நீ உள்ளே போனால், உனக்காக உயிரைக் கொடுப்பேன்" என்றார். ஆனால், ஒரு பாட்டில் தண்ணீர் கூட கொடுக்கவில்லை

    அனுபவத்தில் சொல்கிறேன்...

    அனுபவத்தில் சொல்கிறேன்...

    நான் இதெல்லாம் உங்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்று சொல்லவில்லை. அனுபவத்தில் கற்றுக்கொண்டதால் சொல்லுகிறேன். 'திகார்' வெற்றியடைய வாழ்த்துகள்" என இவ்வாறு பவர்ஸ்டார் சீனிவாசன் தெரிவித்தார்.

    English summary
    “Tihar was actually quite a nice jail, despite what people think,” said Power star Srinivasan, reflecting on his arrest and time spent in jail, at the audio launch of Perarasu’s film Tihar.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X