Don't Miss!
- News ஒரே காரில் 4 ஆண்களுடன் இளம்பெண் பயணம்.. குமரி போலீஸ் கேட்ட கேள்வி.. கேரள இளைஞர்கள் கடும் வாக்குவாதம்
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Finance உங்ககிட்ட கிழிஞ்ச ரூபாய் நோட்டு இருக்கா.. அப்போ கண்டிப்பா இந்த பதிவு உங்களுக்குத்தான்!
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
கட் இல்லை; க்ளியர் 'யு' பெற்ற 'டிக் டிக் டிக்'... ஜனவரி 26 ரிலீஸ் உறுதி!
Recommended Video
சென்னை : மிருதன் படத்தை அடுத்து 'ஜெயம்' ரவியுடன் சக்தி சௌந்தர்ராஜன் இணைந்துள்ள படம் 'டிக் டிக் டிக்'. 'நாய்கள் ஜாக்கிரதை', 'மிருதன்' படங்களைத் தொடர்ந்து சக்தி சௌந்தர்ராஜன் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படம் இந்தியாவின் முதன் விண்வெளி திரைப்படம் என்று கூறப்படுகிறது.
டி.இமான் இசையமைக்கும் இந்தப் படத்தில் 'ஜெயம்' ரவிக்கு ஜோடியாக , நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். நேமிசந்த் ஜபக் தயாரித்துள்ள 'டிக் டிக் டிக்' படத்தை சமீபத்தில் பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்துக்கு எந்த கத்திரியும் போடவில்லை.
அனைத்து தரப்பினரும் பார்க்கக் கூடிய படம் என்று 'டிக் டிக் டிக்' படத்திற்கு 'யு' சான்றிதழும் வழங்கியுள்ளது சென்சார் போர்டு. குடியரசு தினத்தை முன்னிட்டு 'டிக் டிக் டிக்' படம் வருகிற 26-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.
கடந்த சில வாரங்களாக உடல்நலக் குறைவினால் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார் 'ஜெயம்' ரவி. அதனால் 'டிக் டிக் டிக்' படத்தின் ப்ரொமோஷன் பணிகளில் கூட அவரால் முழுமையாக ஈடுபட முடியவில்லை. இருந்தாலும் இன்று அவர் பத்திரிகையாளர்களைச் சந்திக்க உள்ளார். ஜனவரி 26-ஆம் தேதி படம் ரிலீஸாகிறது.