இலக்கியாவை தொடர்ந்து.. சினிமாவில் நடிக்கும் மேலும் ஒரு டிக்டாக் பிரபலம்.. யாருன்னு பாருங்க!
சென்னை: டிக்டாக் இலக்கியாவை தொடர்ந்து மேலும் ஒரு டிக்டாக் பிரபலம் சினிமாவில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் மத்தியில் பெரும் பிரபலமான செயலிகளில் ஒன்று டிக் டாக். இதனை சாமானிய மக்கள் மட்டுமின்றி திரைத்துறை பிரபலங்கள் பலரும் பயன்படுத்தி வந்தனர்.
சீன செயலியான இந்த டிக்டாக் செயலிக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு தடை விதித்து. இதனால் பிரபலங்கள் பலரும் ரொம்பவே வருத்தப்பட்டு தங்களின் கருத்துக்களை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தனர்.

நாளை புதுபடம் படப்பிடிப்பு..
இதுதொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஷேர் செய்துள்ள பதிவில், நாளை புதுபடம் படப்பிடிப்பு.. என பதிவிட்டுள்ளார். மேலும் வொய்ட் அன்ட் வொய்ட் வேட்டி சட்டையில் கழுத்தில் சிவப்பு துண்டுடனும் போஸ் கொடுத்து போட்டோ ஷேர் செய்துள்ளார் ஜிபி முத்து.

கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்
அவருடைய இந்த பதிவையும் அவருடைய போட்டோவையும் பார்த்த நெட்டிசன்கள் ஜிபி முத்துவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் பலரும் அவரை கிண்டலடித்து வருகின்றனர்.

மரக்கடை..
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர் டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து, பழைய கதவு, ஜன்னல் உள்ளிட்டவைகளை வாங்கி அதனை பழுது நீக்கி விற்பனை செய்யும் மரக்கடை நடத்தி வருகிறார்.

தற்கொலை முயற்சி
கொரோனா லாக்டவுன் காரணமாக தொழில் முடக்கம் மற்றும் குடும்ப பிரச்சனை காரணமாக சில மாதங்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றார் ஜிபி முத்து. பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











