சன்னி லியோன் கூடவே இனி டூயட்டுதான்.. அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டர் நம்ம ஜிபி முத்துவுக்கு!
சென்னை: தென்னிந்திய சினிமா பக்கம் கவனத்தை செலுத்தி வருகிறார் கவர்ச்சி நடிகை சன்னி லியோன்.
அவர் நடிப்பில் உருவாக உள்ள புதிய தமிழ் படத்தில் குக் வித் கோமாளி தர்ஷா குப்தா, சதீஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர்.
இந்நிலையில், டிக் டாக் மூலம் பிரபலமான ஜிபி முத்துவும் சன்னி லியோன் படத்தில் ஒப்பந்தமாகி உள்ள தகவல் ஜிபி முத்து ரசிகர்களை குதூகலப்படுத்தி இருக்கிறது.

சவுத் சன்னி
ஆபாச பட நடிகையாக உலக நாடுகளை கதிகலங்க வைத்த சன்னி லியோன், கவர்ச்சி நடிகையாக நார்த்தில் கொடிகட்டி பறந்து வருகிறார். அங்கே அவருக்கு சமீப காலமாக ஏகப்பட்ட போட்டிகள் உருவாகி உள்ள நிலையில், அப்படியே தனது காரை சவுத் பக்கமாக திருப்பி தென்னிந்திய படங்களில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

மலையாள படம்
ஜிஸம் 2 எனும் பாலிவுட் படத்தின் மூலம் கவர்ச்சி நடிகையாக களமிறங்கிய சன்னி லியோன் மம்மூட்டியின் மதுர ராஜா படத்தின் மூலம் மலையாள சினிமா பக்கம் ஒதுங்கி உள்ளார். ரங்கீலா, ஷீரோ என இரு மலையாள படங்களில் லீட் ரோலில் நடித்து வருகிறார் சன்னி லியோன்.

வடகறி
2013ம் ஆண்டே தமிழில் ஜெய் நடிப்பில் வெளியான வடகறி படத்தில் ஐட்டம் பாடலுக்கு ஆடி அசத்தி இருந்தார் சன்னி லியோன். அதன் பிறகு தமிழ் படத்தில் நடிப்பார் சன்னி லியோன் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தின் ஒரு பாடலுக்கு சன்னி லியோன் நடனமாடுவார் என அறிவிக்கப்பட்டு பின்னர் பட்ஜெட் பற்றாக்குறையால் நடிகை இனியா குத்தாட்டம் போட்டு இருந்தார்.

வீரமாதேவி
ஆனாலும், தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தை விடாமல் கொண்டிருந்தார் நடிகை சன்னி லியோன். வடிவுடையான் இயக்கத்தில் பிரம்மாண்ட வரலாற்று படமாக வீரமாதேவி எனும் டைட்டிலில் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆனார். அதன் ஷூட்டிங்கும் ஆரம்பித்த நிலையில், ஏதோ சில காரணங்களுக்காக அந்த படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

திகில் காமெடி படம்
பேய்களை வைத்து காமெடி செய்து ஏகப்பட்ட தமிழ் திரைப்படங்கள் வெளியாகி வெற்றிப் பெற்றுள்ள நிலையில், நடிகை சன்னி லியோனை வைத்து அப்படியொரு முயற்சியை எடுக்க இயக்குநர் யுவன் முடிவு செய்துள்ளார். மலையாளத்தில் ஷீரோ படத்தில் நடித்து வரும் சன்னி லியோன் கையோடு அப்படியே இந்த படத்திலும் நடிக்கப் போகிறாராம்.

குக் வித் கோமாளி பிரபலம்
குக் வித் கோமாளி சீசன் 2வில் போட்டியாளராக கலந்து கொண்ட சின்னத்திரை நடிகை தர்ஷா குப்தாவுக்கு ருத்ர தாண்டவம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் ரிலீசுக்கு காத்திருக்கும் நிலையில், அடுத்ததாக நடிகை சன்னி லியோன் நடிப்பில் உருவாக உள்ள இன்னமும் பெயரிடாத புதிய படத்தில் நடிக்கும் அதிர்ஷ்டமும் கிடைத்துள்ளது.

ஜிபி முத்து
டிக் டாக் செயலியில் தனது மனதிற்கு பட்டதை இஷ்டத்துக்கு பேசி தனது வித்தியாசமான ஸ்லாங்கால் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் ஜிபி முத்து. அந்த செயலி தடை செய்யப்பட்ட பின்னர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்க அதிலும் சுமார் 1 மில்லியன் ரசிகர்கள் இணைந்துள்ளனர்.

சன்னி லியோனுடன் டூயட்
இந்நிலையில், நடிகை சன்னி லியோன் நடிப்பில் உருவாக உள்ள புதிய படத்தில் ஜிபி முத்துவும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். டிக் டாக்கில் டூயட் பாடி அசத்தி வந்த ஜிபி முத்து இப்போ சன்னி லியோன் கூடவே டூயட் பாட போகிறாரா என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

மொட்டை ராஜேந்திரன்
இயக்குநர் யுவன் இயக்கத்தில் உருவாக உள்ள காமெடி த்ரில்லர் படத்தில் சதீஷ், மொட்டை ராஜேந்திரன், தர்ஷா குப்தா, ஜிபி முத்து, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். வீரசக்தி மற்றும் சசிகுமார் இணைந்து தயாரிக்கவுள்ள இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாக உள்ளன.


Click it and Unblock the Notifications











