பிக்பாஸ் சீசன் 6 பெண் போட்டியாளர்.. டிக்டாக் மூலம் அதிரடி கிளப்பிய தனலட்சுமி!
சென்னை : ரசிகர்களின் பேராதரவோடு இன்னும் சில மணிநேரங்களில் துவங்கவுள்ளது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சியில் ஆண், பெண், திருநங்கை என 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில்தான் உள்ளனர்.
இவர்களின் டிக்டாக் மூலம் பிரபலமான தனலட்சுமி என்பவர் பொதுமக்கள் ஆடிஷனில் செலக்ட் செய்யப்பட்டு பங்கேற்றுள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி 5 சீசன்களை வெற்றிகரமாக முடித்துவிட்டு இன்றைய தினம் 6வது சீசனில் நுழைந்துள்ளது. இந்த சீசனில் பல புதுமைகளை புகுத்தியுள்ளது இந்த நிகழ்ச்சி. குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களில் இருந்தும் இருவர் பங்கேற்றுள்ளனர். பிரபலமானவர்களையும், நடிகர், நடிகைகளையும் கொண்டு இந்த நிகழ்ச்சி தனது இதுவரையிலான சீசன்களை மேற்கொண்டுள்ளது.

நிகழ்ச்சியின் போட்டியாளர்கள்
முன்னதாக சில வாரங்களாகவே இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளவுள்ள பிரபலங்கள் குறித்த பல தகவல்கள் வெளியாகின. நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாக சொல்லப்பட்ட பலரும் தற்போது இல்லை. மாறாக அந்த லிஸ்டில் இல்லாதவர்கள் பலர் தற்போது இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

100 நாட்கள் டாஸ்க்
பொதுவாக இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டால் ஏராளமான ரசிகர்களை பெறுவதுடன் பெரிய திரையில் நடிக்கும் வாய்ப்பும் எளிதாக கிடைக்கும் என்பதால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பலரும் அதிகமான ஆர்வத்தை காட்டி வருகின்றனர். 100 நாட்கள் வெளியுலக தொடர்பு இல்லாமல் ஒரே வீட்டில் தங்கியிருப்பது பெரிய டாஸ்டாக இருந்தாலும் அதையடுத்து கிடைக்கும் பிரபலம் இந்த நிகழ்ச்சியின் மிகப்பெரிய ப்ளசாக அமைந்துள்ளது.

சினிமா வாய்ப்புகள்
ஆனால் இந்த நிகழ்ச்சி மூலம் எளிதாக சினிமா வாய்ப்புகளை பெறும் போட்டியாளர்கள் அதிகமாக இருந்தாலும் ஓவியா, ரித்விகா, ஆரவ், ஆரி, முகேன் ராவ் போன்ற சிலர் இன்னும் சரியான வாய்ப்புகள் இல்லாமல்தான் இருக்கின்றனர். ஆனால், நிகழ்ச்சியில் பங்கேற்று இடையில் வெளியில் சென்ற ஹரீஷ் கல்யாண், ரைசா, தர்ஷன் போன்றவர்கள் சிறந்த வாய்ப்புகளுடன் கலக்கி வருகின்றனர்.

பொதுமக்கள் ஆடிஷன்
இதனிடையே இந்த சீசனில் பொதுமக்கள் சிலரும் பங்கேற்க வாய்ப்பளிக்க உள்ளதாக விஜய் டிவி முன்னதாக அறிவித்தது. அதையொட்டி நடத்தப்பட்ட ஆடிஷனில் தனலட்சுமி என்பவரும் இந்த சீசனில் பங்கேற்றுள்ளார். இவர் டிக்டாக் வீடியோக்களை அதிகமாக வெளியிட்டு முன்னதாக ரசிகர்கள் கவர்ந்தவர்.

டிக்டாக் புகழ் தனலட்சுமி
ஈரோடை சேர்ந்த தனலட்சுமி, டிக்டாக் வீடியோக்கள் மூலம் 4 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்களை பெற்றவர். தற்போது இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்களை அதிகமாக வெளியிட்டு வருகிறார். சிறுவயதிலேயே நடிப்பதில் ஆர்வம் கொண்ட இவர் சில குறும்படங்களிலும் பறை இசை ஆல்பத்திலும் முன்னதாக தோன்றியுள்ளார்.


Click it and Unblock the Notifications











