ஏலே செத்த பயலுகளா… ஏலே இப்படி பண்றீங்க… புலம்பிய ஜி.பி முத்து!

சென்னை : சன்னி லியோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒரு படத்தில் ஜி.பி.முத்து ஒப்பந்தமாகியுள்ளார்.

ஜிபி முத்து நடிக்கிறார் என்று செய்தி கிடைத்ததுதான் தாமதம், கிடைத்ததுடா கண்டேட் என்று நெட்சன்ஸ் இஸ்டத்துக்கு மீம்ஸ்களை போட்டு தெரிக்கவிட்டனர்.

இதற்கு ஜிபி முத்து, அவருக்கே உரித்தான பாணியில் பதிலளித்துள்ளார்

ஜி.பி.முத்து

ஜி.பி.முத்து

டிக் டாக் செயலியில் பிரபலமாக இருந்தவர் ஜி.பி.முத்து. இந்தியாவில் டிக் டாக் தடை செய்யப்பட்ட பிறகு யூ-டியூப் பக்கம் ஒன்றை தொடங்கினார். குறைந்த காலகட்டத்திலேயே இவரது பக்கத்தை மிக அதிகமானோர் பின் தொடர்ந்தனர். இதுவரை ஏறக்குறைய 9 லட்சத்துக்கு அதிகமானோர் ஜி.பி.முத்துவை பின் தொடர்கின்றனர். இவர் குறித்த மீம்ஸ்களும், வீடியோக்களும் தினமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவரை விட இவர் பேசும் ஸ்டைல் தான் அனைவருக்கும் பிடித்ததே. இதனால் இவரின் ரசிகர்கள் அவரை கலாய்த்து அண்ணே அண்ணே இன்னும் பேசுங்க பேசுங்க என்று அவரை காண்டேத்துவார்கள்.

காமெடி படம்

காமெடி படம்

இந்நிலையில் சன்னி லியோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒரு படத்தில் ஜி.பி.முத்து ஒப்பந்தமாகியுள்ளார். அப்படத்தில், நகைச்சுவை நடிகர் சதீஷ், குக் வித் கோமாளி தர்ஷா குப்தா நடிக்கிறார். இத்திரைப்படம், திகில் மற்றும் காமெடி கலத்த திரைப்டமாகும். இத்திரைப்படத்தை வீரசக்தி மற்றும் சசிகுமார் தயாரிக்கின்றனர். இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் நடிக்கிறார். தலைப்பிடப்படாத இப்படத்தில் மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இப்படத்தை யுவன் இயக்குகிறார். ஜாவித் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சன்னிலியோவுடன் ஜிபி முத்து மீம்ஸ்

சன்னிலியோவுடன் ஜிபி முத்து மீம்ஸ்

இந்நிலையில், ஜிபி முத்து சன்னிலியோலுவுடன் நடிக்கிறார் என்ற செய்திபரவியதை அடுத்து நெட்டிசன் அவரை வெச்சி செய்துள்ளனர். மீம்ஸ் கிரியேட்டர்ஸ் சும்மாவே மீம்ஸ் போட்டு தெறிக்கவிடுவாங்க, சும்மா இருந்த வாய்க்கு தீணி போட்டக்கதையா சன்னிலியோவுடன் ஜிபி முத்து நடிக்கிறார் என்ற செய்தி பரவியது. மீம்ஸ் போட்டு அவரை கலாய்த்து வருகின்றனர்.

ஏலே செத்த பயலுகளா

ஏலே செத்த பயலுகளா

காட்டுத்தீ போல பரவிவரும் மீம்சை பார்த்து கடுப்பான ஜி.பி முத்து, அவருக்கே உரித்தான ஸ்டையில், ஏலே செத்த பயலுகளா... ஏலே இப்படி பண்றீங்க என்றும், சன்னி அக்கா இதைப்பார்த்தா என்னலே நினைப்பாங்க என்று அவருக்கே உரிய மொழியில் பேசி உள்ளார். இணையத்தில் வெளியான இந்த செய்தியையும் நெட்டிசன்ஸ் டிரெண்டாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X