என் கணவர் யாருடனும் சண்டை போட மாட்டார்.. ஜெயிச்சிட்டு வருவார்.. பிக்பாஸ் ஜி.பி. முத்து மனைவி பேட்டி!
சென்னை : டிக் டாக் பிரபலம் ஜிபி முத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நிலையில், அவரது மனைவி அஜிதா அவர் நிச்சயம் ஜெயிப்பார் என்றார்.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழதை மாலை 9 மணிக்கு தொடங்கியது. அதில் முதல் ஆளாக ஜிபி முத்து உள்ளே வந்துள்ளார்.
ஜிபி முத்து உள்ளே வந்ததும் அவரின் தீவிர ரசிகர்கள் அவருக்கு என்று ஆர்மி உருவாக்கி அவர் தொடர்பான வீடியோக்கள், ட்வீட்களை ட்ரெண்டிங் வருகின்றனர்.

வெள்ளந்தியான மனுஷன்
டிக்டாக் செயலி மூலம் உலகம் முழுவது பலபேர் பிரபலமாகி உள்ளார்கள். தமிழ்நாட்டில் டிக்டாக் மூலம் பிரபலமானவர்களில் மிகவும் முக்கியமானர் ஜி.பி. முத்து. அவருடைய நெல்லை வட்டார வெள்ளந்தியான பேச்சு, வசையும் அனைவரையும் சிரிக்க வைக்கும். இதன் மூலம் ஜி.பி. முத்து உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ளார்.

பயமா இருக்கு சார்
பிக் பாஸ் சீசன் 6ல் முதல் போட்டியாளராக வந்த ஜிபி முத்து, யாருமே இல்லாத பிரம்மாண்டமான வீட்டில் தனியா இருக்க பயமா இருக்கு சார் யாராவது அனுப்புங்க என அவருடைய ஸ்டைலில் பேசினார். அதற்கு கமல்ஹாசன், டெக்னிக்கல் பிராபளம், நாளை 4.30 மணி வரை நீங்கள் மட்டும்தான் இருக்க வேண்டும் என்று கூற, நான் எப்படி தனியாக இருப்பது. பயமாக இருக்கிறது சார் என்றார்.

ஆதாமா அது யாரு
இதையடுத்து, கமல், உலகில் ஆதாம் படைத்த பிறகு, ஏவாள் படைக்கப்படும் வரை ஆதாம் எப்படி தனியாக இருந்திருப்பார் நினைத்துப் பாருங்கள் என்று கேட்க, ஆதாமா அது யார் என்பது போல கேட்டு வந்த முதல் நாளே கைத்தட்டலை பெற்றார். இணையத்தில் ஜிபி முத்துவின் ரசிகர்கள் அவரது வீடியோக்களை டிராண்டாக்கி வருகின்றனர்.

ஜெயிக்க வேண்டும்
இந்நிலையில், ஜிபி முத்துவின் மனைவி அஜிதா அளித்துள்ள பேட்டியில், டிக் டாக்கில் வீடியோ போட ஆரம்பித்து அதன்பிறகு ரொம்ப கஷ்டப்பட்டு இன்று இந்த இடத்திற்கு வந்து இருக்கிறார் என்றால் எல்லாம் அவருடைய முயற்சிதான். யாரிடமும் சண்டை போடாமல் நல்ல விளையாடி ஜெயிச்சிட்டு வரணும்னு சொல்லி இருக்கிறேன். இதுவரை அவர் எங்களை விட்டு இருந்தது இல்லை அதை நினைத்தால் தான் வருத்தமான இருக்கிறது. இருந்தாலும் என் கணவர் ஜெயிக்க வேண்டும் என்றார் அஜிதா.


Click it and Unblock the Notifications











