டிக்டாக் மாதிரியில்ல.இலக்கியா நாகரிமாதான் காட்டியிருக்காங்க.நீ சுடத்தான் வந்தீயா இயக்குநர் ஓபன் டாக்
சென்னை: டிக்டாக் பிரபலமான இலக்கியா நடித்துள்ள படத்தில் நாகரிகமான அளவில்தான் கவர்ச்சி காட்டியிருப்பதாக அப்படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
Recommended Video

டிக்டாக் செயலிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இளம்பெண்கள் இளைஞர்கள், குழந்தைகள், முதியவர்கள் என பலரும் இந்த டிக்டாக் செயலியின் மூலம் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வந்தனர்.
திரைத்துறை பிரபலங்கள் பலரும் இந்த செயலியை பயன்படுத்தி வந்தனர். டிக்டாக் மூலம் பல திறமைசாலிகள் திரைத்துறைக்கு கிடைத்துள்ளனர்.

பெரும் கவலை
அதே நேரத்தில் பலரின் வாழ்க்கையும் இந்த டிக்டாக் செயலி மூலம் சீரழிந்துள்ளது. இந்நிலையில் சீன செயலியான இந்த டிக்டாக் செயலிக்கு மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தடை விதித்தது.

ஏகத்துக்கும் தாராளம்
இந்நிலையில் டிக்டாக் பிரபலங்களில் ஒருவரான இலக்கியாவுக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. டபுள் மீனிங் டயலாக், கவர்ச்சி உடை, கவர்ச்சி ஆட்டம் என ஏகத்துக்கும் தாராளம் காட்டி வீடியோக்களை வெளியிட்டு இளைஞர்களை மிரட்டி வந்தார் டிக்டாக் இலக்கியா.

நீ சுடத்தான் வந்தீயா?
இலக்கியா படத்தில் நடிக்கிறார் என்றதும் பலரும் பதறிதான் போயினர். படத்தின் தலைப்பும் நீ சுடத்தான் வந்தீயா? என மிரட்டலாகவே இருந்தது. இந்நிலையில் இலக்கியா நடித்துள்ள படம் குறித்து அதன் இயக்குநரான துரைராஜ் இப்படம் குறித்தும் இலக்கியா குறித்தும் பேசியுள்ளார்.

ஆரம்பத்தில் கஷ்டப்பட்டார்
அதாவது, டிக் டாக்கிற்காக வீடியோவில் தோன்றி நடிப்பது வேறு. படத்தில் காட்சிகளில் நடிப்பது வேறு. ஆரம்பத்தில் சில நாட்கள் நடிப்பதற்கு சிரமப்பட்டார். போகப் போக சரியாகிவிட்டது. பிறகு நான் சொல்வதைப் புரிந்துகொண்டு சரியாக நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

நாகரிகமான அளவில்..
இந்தப்பட அனுபவம் அவருக்கு ரொம்பவே மாறுபட்டதாக இருந்ததாக இலக்கியா கூறினார். டிக் டாக் போல மிகையாக இல்லாமல் அவர் படத்தில் நாகரிகமான அளவில்தான் கவர்ச்சி காட்டியிருக்கிறார் என்றும் கூறியுள்ளார் இயக்குநர் துரைராஜ்.


Click it and Unblock the Notifications











